districts

img

இறுதி ஊர்வலத்தில் பட்டாசு வெடிக்க, பூ உதிர்க்க தடை போடி நகர்மன்றத்தில் தீர்மானம்

தேனி, ஜன.10-  போடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நகர்மன்ற கூட்டத்தில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்கவும், இறுதி ஊர்வலத்தின் போது பொது இடங்களில் பூக்களை உதிர்க் கவம் தடை விதித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  தேனி மாவட்டம், போடி நகர்மன்ற சாதாரணக் கூட்டம் நகர்மன்ற தலைவி ராஜராஜேஸ்வரி சங்கர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் பார்கவி, நகராட்சி பொறியாளர் குணசேகர், சுகாதார அலுவலர் மணி கண்டன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்மன்ற கூட்டத்தில் பொது இடங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதித்தல், இறுதி ஊர்வலத்தின்போது பொது இடங்களில் பூக்களை உதிர்க்க தடை விதித்தல், பொது சுகாதார வளாக கழிப்பிடங்களை பொது ஏலத்திற்கு விடுதல் உள்ளிட்ட 57 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.