கரூர், ஜன.28 - இந்திய கட்டுமான தொழிலாளர் சங்கத்தின் 6 ஆவது மாவட்ட மாநாடு கரூர் சுங்ககேட்டில் உள்ள சங்க அலுவலக கூட்ட ரங்கில் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ப.சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.துரை சாமி அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். கட்டுமான சம்மேளனத்தின் மாநில சிறப்பு தலைவர் ஆர்.சிங்காரவேலு மாநாட்டை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். சங்கத் தின் மாவட்டச் செயலாளர் சி.ஆர்.ராஜா முகமது வேலையறிக்கையையும், மாவட்ட பொருளாளர் பி.ராஜீவ்காந்தி வரவு-செலவு அறிக்கையையும் முன்வைத்தனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் சி.முருகேசன், உள்ளாட்சி சங்க மாவட்டச் செயலாளர் எம். சுப்பிரமணியன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநிலச் செயலாளர் கே. தனபால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இம்மாநாட்டில், கம்பி, சிமெண்ட், ஜல்லி போன்ற அடிப்படைப் பொருட்களின் ஜிஎஸ்டி வரியைக் குறைத்து, விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும். சிறிய கட்டுமானப் பணிகளுக்கு மாட்டு வண்டிகள் மூலம் மணல் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். எம்.சாண்ட் விற்பனையில் ஏற்ப டும் முறைகேடுகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கட்டுமானத் தொழி லாளர்களின் ஓய்வூதியத் தொகையை ரூ.3,000 ஆக உயர்த்த வேண்டும். பெண் தொழிலாளர்களுக்கு 55 வயதில் ஓய்வூதி யம் வழங்க வேண்டும். பண்டிகை காலங் களில் ரூ.5,000 சிறப்பு உதவித்தொகை வழங்க வேண்டும். வீடு கட்ட வழங்கப்படும் ரூ.4 லட்சம் உதவித்தொகை விண்ணப்பங்களை விரை வாக பரிசீலிக்க வேண்டும். கட்டுமானப் பணியாளர்களுக்கு ரூ.5 லட்சம் விபத்துக் காப்பீடு, ரூ.10 லட்சம் ஆயுள் காப்பீடு, பத்து லட்சத்திற்கு மேல் மதிப்புள்ள கட்டி டங்களில் தொழிலாளர்களுக்கான அடிப்படை வசதிகளை கட்டாயம் செய்து தர வேண்டும். ஆன்லைன் பதிவு முறையை மேம்படுத்த வேண்டும். புதுப்பித்தல், கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை விரை வாக பரிசீலிக்க வேண்டும். டீமேட் ரிஜெக்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும் என்பன உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.