உடுமலை, ஜன.29 - ஜோத்தம்பட்டி ஊராட் சியை, கணியூர் பேரூராட் சியுடன் இணைக்கும் அர சாணையை ரத்து செய்யக் கோரி வீடுகளில் கருப்பு கொடிகாடி போராட்டம் நடத் தப் போவதாக கிராம மக் கள் தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டி ஊராட் சியை, அருகில் உள்ள கணி யூர் பேரூராட்சியுடன் இணைப்பதற்கு ஆரம் பம் முதலே ஜோத்தம்பட்டி ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். மேலும், கடந்த வாரம் கருத்து கேட்புக்கூட்டம் நடத்தி கையெழுத்துகள் பெற்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக் கப்பட்டது. இந்நிலையில் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜோத்தம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் மடத்துக்குளம் வட் டார வளர்ச்சி அலுவலர் ரங்கநாதன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர். அப் போது பொதுமக்கள் அதிகாரிகளிடம் ஜோத் தம்பட்டி ஊராட்சியை, கணியூர் பேரூராட்சி யுடன் இணைக்கும் அரசாணையை ரத்து செய்ய வலியுறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட் டனர். இதையடுத்து பொதுமக்கள் ஒரும னதாக கிராம சபை கூட்டத்தை புறக்க ணித்து வெளிநடப்பு செய்தனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ஜோத்தம்பட்டி ஊராட்சியை, கணியூர் பேரூ ராட்சியுடன் இணைக்கும் அரசாணை ரத்து செய்ய வேண்டும். இதனால் வரி உயர்வு, 100 நாள் வேலை திட்டத்தில் வேலை இழப்பு உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகள் ஏற்படும். அர சாணை ரத்து செய்யும் வரை வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தப்படும். பெரு வாரியான மக்களை திரட்டி மறியல் போராட் டத்தில் ஈடுபட போவதாகவும் பொதுமக்கள் கூறினர்.