districts

img

குடிநீர் வசதி செய்து தரக்கோரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு

உடுமலை,ஜன.29- உடுமலை அரசு கலைக் கல்லூரியில் கழிப்பிடம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வச திகள் செய்து தரக் கோரி மாணவ, மாணவி கள் புதனன்று வகுப்பை பறக்கணித்து போராட்டம் நடத்தினர். திருப்பூர் மாவட்டம் உடுமலை அரசு கலைக் கல்லூரியில் 1000 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த கல்லூரியில் குடிநீர் வசதி, கழிப்பிட  வசதி, விளையாட்டு மைதானம் பராமரிப்பு  இன்றி உள்ளதாக மாணவ, மாணவிகள் குற் றம் சாட்டியுள்ளனர். மேலும், இதுகுறித்து பல முறை கல்லூரி நிர்வாகத்திடம் மனு அளித் தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்ப டுகிறது. இந்நிலையில், புதனன்று ஆயிரத் துக்கு மேற்பட்ட மாணவ, மாணவிகள் வகுப்பு களை புறக்கணித்து கல்லூரி முன்பு தர்ணா  போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து மாணவர்கள் கூறுகையில், மாணவர்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் கல்லூரி நிர்வாகம் தொடர்ந்து அலட்சியம் காட்டி வருகிறது. இனியும் அலட்சியம் காட்டாமல் குடிநீர் மற் றும் கழிப்பிடம் வசதியை உடனே செய்து தர  வேண்டும். இல்லாவிடில் தொடர் போராட்டங் கள் நடத்தப்படும் என மாணவர்கள் தெரிவித் தனர்.