districts

img

வடமாநில தொழிலாளர்களுக்கு வேலை வழங்கியதை கண்டித்து சுமைப்பணி தொழிலாளர்கள் போராட்டம்

திருச்சிராப்பள்ளி, அக்.8- 30 ஆண்டுகளாக வேலை செய்த  தொழிலாளர்களின் வேலையை பறித்து, வடமாநில தொழிலா ளர்களுக்கு வேலை வழங்கியதையும், தவறான தகவல் கொடுத்து பெறப்பட்ட  உயர்நீதி மன்ற உத்தரவை காரணம்  காட்டி, ஒட்டுமொத்த தொழிலாளர்க ளுக்கும் விரோதமாக செயல்படும் காவல்துறையை கண்டித்தும், கூலி உயர்வு வழங்க வேண்டும். 140 விதிப்படி 100 கிலோ மூட்டை சுமை தூக்க வைப்பதை தடுக்க உரிய  நடவடிக்கை எடுக்க வேண்டும். தொழி லாளர் பிரச்சனையை, தொழிலாளர் நல  அலுவலகத்தில் பேசித் தீர்க்க வேண் டும். மீண்டும் வேலை வழங்கி 3000 சுமைப்பணி தொழிலாளர்களின் வேலை உரிமையை பாதுகாக்க வேண்டுமென வலியுறுத்தி சிஐடியு திருச்சி மாவட்ட சுமைப்பணி தொழிலா ளர்கள் சங்கம் சார்பில் திங்களன்று தீப்பந்தம் ஏந்தி ஊர்வலம் நடை பெற்றது. திருச்சி காந்தி மார்கட் கமான் வளைவிலிருந்து புறப்பட்ட தீப்பந்தம் ஏந்திய ஊர்வலம், இ.பி.சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே நிறை வடைந்தது. பின்னர் அங்கு கோரிக்கை  விளக்க கூட்டம். நடந்தது. கூட்டத்திற்கு,  சுமைப் பணி சங்க மாவட்டச் செயலா ளர் சிவக்குமார் தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், லாரி செட் சங்க செயலாளர் ராமர், சிபிஎம் பகுதி செயலாளர் லெனின், மெடிக்கல் சங்க செயலாளர் செல்வராஜ், குடிநீர் வடிகால் வாரிய சங்க செயலாளர் மருதைராஜ் ஆகியோர் பேசினர். இதில், 300- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.