districts

டீசல் செயல்திறனில் உயரிய இலக்கை அடைந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்திற்கு விருது

திருச்சிராப்பள்ளி, ஏப்.12- ஒவ்வொரு ஆண்டும் தேசிய அளவில் உள்ள போக்குவரத்துக் கழகங்களில் டீசல் செயல்திறன் தொடர்பாக சிறந்து விளங்கும் போக்குவரத்துக் கழகத்திற்கு பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி கழகம் சார்பில் விருது வழங்கப்பட்டு வருகிறது. 2020-21 ஆம் ஆண்டிற்கான சிறந்த டீசல் செயல்திறன் விருது தேசிய அளவில் உள்ள அனைத்து போக்குவரத்துக் கழகங்களில் பேருந்து இயக்கத்திற்கு ஒரு லிட்டர் டீசலுக்கு 5.80 கிலோமீட்டர் என்ற உயரிய இலக்கை ஈட்டி சாதனை புரிந்தமைக்காக சிறந்த போக்குவரத்துக் கழகமாக, பெட்ரோலியம் சேமிப்பு மற்றும் ஆராய்ச்சி கழகத்தால் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (கும்பகோணம்) லிமிடெட் தேர்வு செய்யப்பட்டுள்ளது.  அதற்கான விருது, கேடயம் மற்றும் ரூ.3 லட்சத்திற்கான பரிசுத் தொகையை புதுதில்லியில் நடைபெற்ற விழாவில், பெட்ரோலியத் துறை அமைச்சரக செயலாளர் பங்கஜ்ஜெயின், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் மேலாண்மை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகனிடம் வழங்கினார்.  மேற்கண்ட இந்த தகவலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட் மேலாண்மை இயக்குனர் எஸ்.எஸ்.ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.