புதிரை வண்ணார் சமூகத்தவர்கள் தொழில் முனைவோராக வாய்ப்பு
புதுக்கோட்டை, ஜன.9- புதிரை வண்ணார் சமூகத்தைச் சார்ந்தவர்கள் தொழில் முனைவோராக வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு. அருணா தெரிவித்துள்ளதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான தொழில் முனைவுத் திட்டத்தின் கீழ், திட்ட மதிப்புத் தொகையில் 35 விழுக்காடு அல்லது ரூ.3.50 இலட்சம் இவற்றில் எது குறைவானதோ அத்தொகை, மானியத்துடன் கூடிய வங்கிக்கடனுடன் வழங்கப்படும். இத்திட்டத்தில் தவனைத் தொகையினை தவறாமல் திரும்பச் செலுத்தும் பயனாளிகளுக்கு மேலும் 6 விழுக்காடு சதவீத வட்டி மானியம் வழங்கப்படும். விருப்பமுள்ள புதிரை வண்ணார் சமூகத்தினர் மேற்கண்ட திட்டத்தின் கீழ் தாட்கோ இணையதள முகவரியில் தொழில் முனைவோர்களாக விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பம் செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, புதுக்கோட்டை என்ற முகவரியிலும் அல்லது 04322-221487 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொண்டு உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்து இவ்வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.
ஆதிதிராவிடர் சமூகத்தினருக்கு தொழில்நுட்பப் பயிற்சி
புதுக்கோட்டை, ஜன.9- ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிசியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளன. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) மூலமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்தவர்களுக்கு பல்வேறு திறன் அடிப்படையிலான பயிற்சி திட்டங்கள் வழங்கப்படுகிறது. இதன் அடிப்படையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்களுக்கு தொழில் நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிசியன் பயிற்சிகள் அளிக்கப்படவுள்ளது. தொழில்நுட்ப பயிற்சியாளர் மற்றும் பிராட்பேண்ட் டெக்னிசியன் பயிற்சியில் சேர்ந்து பயில, பன்னிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி, தொழிற் பயிற்சி பட்டயம் படிப்பு மற்றும் ஏதேனும் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 இலட்சத்திற்குள் இருக்க வேண்டும். இப்பயிற்சி முடித்த உடன் பயிற்சி அளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும். இப்பயிற்சியில் சேர்வதற்கு தாட்கோ இணையதளம் மூலம் பதிவு செய்ய வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட மேலாளர் அலுவலகம், தாட்கோ, புதுக்கோட்டை என்ற முகவரியிலும் அல்லது 04322-221487 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதியவரை தாக்கி கொலை மிரட்டல்
திருச்சிராப்பள்ளி, ஜன.9- திருச்சி அடுத்த லால்குடி, தண்டன்கோரை வெள்ளாளர் தெருவை சேர்ந்தவர் தேவராஜன்(74) என்பவர், தண்டன்கோரை பகுதியில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோவில் நிலங்களை, இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் மீட்டதாக தெரிகிறது. இந்த நிலையில் அவர், ஸ்ரீரங்கத்தில் உள்ள தன் மகள் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, ஸ்ரீரங்கம் பஞ்சகரை அருகே வந்த சில மர்ம நபர்கள் தேவராஜனை வழிமறித்து தாக்கி, அரிவாளால் கொலை செய்ய முயற்சிததுள்ளனர். அதோடு தேவராஜனை தாக்கியதை தங்கள் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த தாக்குதலில் தேவராஜ் பலத்த காயம் அடைந்தார். இதுகுறித்து, திருச்சி உத்தமர் கோவில் செயல் அலுவலரும், லால்குடி தண்டன்கோரை கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர் ஆலயத்தின் பொறுப்பாளருமான புனிதா அளித்த புகாரின் பேரில், ஸ்ரீரங்கம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர், முதல் கட்ட விசாரணையில் லால்குடி தண்டன்கோரை கிராமத்தைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவரும், அவருடைய கூட்டாளியான மற்றொருவரும் முன்பகை காரணமாக தேவராஜனை தாக்கியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மூத்த தோழர் பி.மணி காலமானார்
திருவாரூர், ஜன.9- சிபிஎம் மூத்த தோழர் பி.மணி (84), சேங்காலிபுரத்தில் உள்ள அவரின் இல்லத்தில் வயது மூப்பு காரணமாக புதன்கிழமை காலமானார். இவர், திருவாரூர் மாவட்ட சிஐடியு மாவட்டத் துணை தலைவரும், குடவாசல் சிபிஎம் கட்சி உறுப்பினரும், போக்குவரத்து கழகத்தில் ஓட்டுனராக பணிபுரிந்து ஓய்வு பெற்ற தோழர் எம்.அம்பேத்கரின் தந்தையுமாவார். தோழரின் மறைவு செய்தி அறிந்த சிபிஎம் மாவட்டச் செயலாளர் டி.முருகையன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.சுந்தரமூர்த்தி, சிஐடியு மாவட்டத்தலைவர் எம்.கே.என்.அனிபா, மாநில செயற்குழு உறுப்பினர் ஏ. பிரேமா ஆகியோர் அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். உடன் சிபிஎம் குடவாசல் நகரச்செயலாளர் டி.ஜி.சேகர், ஒன்றியச் செயலாளர் டி.லெனின், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.லெட்சுமி, கட்சியின் ஒன்றிய, நகர குழு உறுப்பினர்கள் மற்றும் வர்க்க வெகுஜன அமைப்பின் நிர்வாகிகள், தோழர்கள் அஞ்சலி செலுத்தினர். வியாழன் மாலை இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது.
சிவகாசி: தொழில் உரிமக் கட்டணத்தை உயர்த்த எதிர்ப்பு கவுன்சிலர்கள் போராட்டம்
சிவகாசி, ஜன.9- சிவகாசி மாநகராட்சிக் கூட்டத்தில் தொழில் உரிமக் கட்டணங்களை உயர்த்த எதிர்ப்பு தெரிவித்து மாமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில் அவசரக் கூட்டம் மேயர் சங்கீதாஇன்பம் தலைமையில் நடைபெற்றது. ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவிற்கு அனைத்து உறுப்பினர்களும் அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சிகளில் செயல்படும் தொழில் இனங்களை சிறு-குறு மற்றும் நடுத்தரம் என்று வகைப்படுத்தி, தொழில் உரிமம் பெறு வதற்கான உரிமக் கட்டணங்களை நிர்ணயம் செய்யப் பட்டுள்ளன. அதன்படி, சிவகாசி மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வர்த்தக மற்றும் வணிகங்கள், தொழில்கள், தொழிற்சாலைகள் மேலும் பிற நோக்கங்களுக்கான உரிமம் பெறுவதற்காக கட்டண விகிதங்கள் பற்றிய பட்டி யல் மாமன்றத்தில் வைக்கப்பட்டது. இத்தீர்மானத்தை திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளின் மாமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தனர். மேலும், அரசாணையை ரத்து செய்யக்கோரி அமளியில் ஈடுபட்டனர். அப்போது, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கூட்டம் முடிவடைந்ததாக மேயர் சங்கீதா இன்பம் அறிவித்த தோடு, கூட்ட அரங்கை விட்டு வெளியேறினார். எனவே, சிறு- குறு, நடுத்தர தொழில்களுக்கு எதிரான தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டுமென வலியுறுத்தி மாமன்ற உறுப்பினர்கள் கூட்ட அரங்கை விட்டு வெளி யேறாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், ஆணையாளரை முற்றுகையிட்டதோடு, ஏற்க னவே வீட்டு வரி, குடிநீர் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. மின் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதனால் பொது மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தொழில் உரிமக் கட்டணங்களையும் உயர்த்தக்கூடாது. அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என ஆணை யாளர் கிருஷ்ணமூர்த்தியிடம் 35 மாமன்ற உறுப்பி னர்கள் கையொப்பமிட்டு தமிழக அரசுக்கு பரிந்துரைக்க வேண்டுமென்று மனு அளித்தனர். இதனால், மாநகராட்சி அலுவலகத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.
லஞ்சம் வாங்கிய விஏஓவிற்கு 3 ஆண்டு சிறை: நீதிமன்றம்
விருதுநகர், ஜன.9- திருவில்லிபுத்தூர் அருகே உள்ளது டி.மானகசேரி கிராமம். இங்கு விஏஓவாக பணிபுரிந்தவர் அம்மை யப்பன். இவர் கடந்த 2010 மே 6 அன்று வாரிசு சான்று கோரிய சுப்பையாபாண்டி என்பவரிடம் ரூ.500 லஞ்சம் பெற்றார். அப்போது லஞ்ச ஒழிப்புத்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த வழக்கு, திருவில்லிபுத்தூர் தலைமை குற்ற வியல் நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. கடந்த 2019 ஜன.31 அன்று அம்மையப்பனுக்கு 3 வருட கடுங்காவல் தண்டனையும் ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்து நீதி மன்றம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து அம்மையப்பன், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதியரசர் இளங்கோவன் முன்னிலையில் விசா ரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த அவர், மேல்முறை யீட்டு மனுவை தள்ளுபடி செய்ததோடு, ஏற்கனவே, வழங்கப்பட்ட 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.10ஆயிரம் அபராதத்தையும் உறுதி செய்து உத்தரவிட்டார்.
சீமானைக் கைது செய்யக் கோரி திண்டுக்கல் காவல்நிலையத்தில் புகார்
திண்டுக்கல், ஜன.9- பெரியாரைப் பற்றி அவதூறாக பேசிய நாம் தமிழர் கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை கண்டித்து வியாழனன்று திராவிடர் கழகம், தந்தை பெரியார் திரா விடர் கழகம் உள்ளிட்ட பெரியாரிய அமைப்புகள் மற்றும் தலித் அமைப்புகள் சார்பாக வடக்கு காவல் நிலைய முன் பாக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதனை அடுத்து சீமான் மீது புகார் அளிக்கப்பட்டது. வழக்கறிஞர் ஆனந்த முனி ராஜ் தலைமை வகித்தார்.
அனைத்து சமூகத்தினர் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு ஆட்சியர், காவல் ஆணையரிடம் விளக்கம் பெற நீதிமன்றம் உத்தரவு
மதுரை, ஜன.9- மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழா கமிட்டியில் அனைத்து சமூகத்தினரை யும் ஒன்றிணைத்து குழு அமைக்க உத்தர விட கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதுகுறித்து அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தாக்கல் செய்த மனு விப ரம் வருமாறு: அவனியாபுரத்தில் ஒவ்வொரு ஆண்டும் தை முதல் நாள் அனைத்து சமு தாயத்தினரின் பங்களிப்புடன் ஜல்லிக்கட்டு நடத்தப்படும். கடந்த 2023 ஆம் ஆண்டு கண்ணன் என்பவர் தென்கால் பாசன விவ சாயிகள் சங்கம் எனும் சங்கத்தை பதிவு செய்து ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையை கோரினார். அவரது குடும்ப உறுப்பினர்களையும், உறவினர்களையும் மட்டுமே உறுப்பினர்களாக இந்த சங்கம் கொண்டுள்ளது. இவர், பட்டியல் சமூகத்தை சேர்ந்த வர்கள் குழுவில் பங்கேற்பதை தடுத்து வரு கிறார். அமைதி பேச்சுவார்த்தையில் பட்டி யல் சமூகத்தினருடன் சமமாக அமர்ந்து ஜல்லிக்கட்டு நடத்த தேவை இல்லை என தெரிவித்தார். கடந்த ஆண்டு இது தொடர் பான வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜல்லிக்கட்டை அனைத்து சமூகத்தினரும் இணைந்து நடத்த வேண்டும் என உத்த ரவு பிறப்பித்திருந்தது. பல இடங்களில் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்க பட்டியல் சமூகத்தினரை அனு மதிப்பதில்லை. பட்டியல் சமூகத்தினரை தவிர்த்து ஜல்லிக்கட்டை நடத்துவது இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. ஆகவே அனைத்து சமூகத்தினரையும் கொண்ட ஒருங்கிணைப்பு குழுவை அமைத்து அவனியாபுரம் ஜல்லிக்கட்டை நடத்த உத்தரவிட வேண்டும்” என கூறி யிருந்தார். இந்த வழக்கை வியாழனன்று விசா ரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, ஜல்லிக்கட்டு போட்டி துவங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுள்ள நிலையில் கடைசி நேரத்தில் இது போன்று மனு தாக்கல் செய்தால் நீதிமன்றம் என்ன உத்தரவு பிறப்பிக்க முடியும் என கேள்வி எழுப்பினர். வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், தமிழக காவல்துறை ஆணையர் ஆகியோரிடம் உரிய விளக்கம் பெற்று தெரி விக்க அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டு வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.
சிறுமலை பல்லுயிர் பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி மனு
மதுரை, ஜன.9- திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை யில் கட்டபட்ட பல்லுயிர் பூங்காவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர கோரி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மதுரையைச் சேர்ந்த மணிபாரதி உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: “திண்டுக்கல் மாவட்டத்தில் சிறுமலை யில் அரிய வகை மான்கள், அணில்கள் உள் ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இயற்கை சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக 2019 ஆம் ஆண்டு சிறுமலையில் பல்லுயிர் பூங்கா அமைக்கப்பட்டது. பல வகை மூலி கைகள் சிறுமலை பகுதியில் உள்ளன. 100 அரிய வகை மரக்கன்றுகளை அவற்றின் அறிவியல் பெயருடன் காட்சிப்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படவிருந்தது. ஆனால் இதுவரை பல்லுயிர் பூங்கா திறந்து பொதுமக்களின் பார்வைக்கு கொணரப்பட வில்லை. இப்பூங்கா விரைவில் திறக்கப்பட்டால் தாவரவியல் துறையைச் சேர்ந்த மாண வர்கள் மிகுந்த பலனடைவர். எனவே சிறுமலையில் அமைக்கப்பட் டுள்ள பல்லுயிர் பூங்காவை திறந்து பொது மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்து அங்கு போதிய அடிப்படை வசதிகளையும் செய்து தர உத்தரவிட வேண்டும்” என கூறி யிருந்தார். இந்த வழக்கை வியாழனன்று விசா ரித்த நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், மரிய கிளாட் அமர்வு, வழக்கு தொடர்பாக திண் டுக்கல் மாவட்ட ஆட்சியர், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.