திருவாரூர், ஜன.24 - திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் பெ.சண் முகம் ஆகியோர் மாவட்ட கட்சி அலு வலகத்திற்கு வந்தனர். அவர்களை நேரில் சந்தித்த நாகை மண்டல அரசு விரைவு போக்குவரத்தில் நடத்துநராக பணிபுரிந்த ஓய்வுபெற்ற தோழர் சீனி.மணி, தனது ஒரு மாத ஓய்வூதிய தொகை ரூ.16,589-க்கான காசோ லையை, கட்சியின் அகில இந்திய மாநாட்டு நிதியாக தலைவர்களிடம் அளித்தார். காசோலையை பெற்றுக் கொண்ட தலை வர்கள் தோழர் சீனி.மணிக்கு வாழ்த்து தெரி வித்தனர். தோழர் சீனி மணி சிஐடியு மாவட்ட துணைத் தலைவராக பொறுப்பில் இருந்து மக்கள் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சியின் மாநிலச் செயலாளராக பொறுப்பேற்ற பிறகு, முதல் முறையாக திரு வாரூர் மாவட்டத்திற்கு வந்த பெ.சண்முகம் அவர்களுக்கு, திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்வில், சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம், மாநிலக் குழு உறுப்பினர்கள் சாமி.நட ராஜன், ஐ.வி.நாகராஜன், மாவட்டச் செய லாளர் டி.முருகையன் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.