பாபநாசம், மார்ச்.3- பாபநாசம் அருகேவுள்ள அம்மாபேட்டையில் கலைஞர் மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பண்ணை கருவிகள், ஜிப்சம் ஆகியவற்றை விவசாயிகளுக்கு தஞ்சை மாவட்ட வேளாண் துணை இயக்குநர் (மாநில திட் டங்கள்) அ.கோமதி தங்கம் வழங்கினார். அப்போது அவர் பேசிய தாவது: நடப்பு கோடை பருவத் தில் விவசாயிகள் அதிக அளவில் மாற்றுப்பயிர்களான உளுந்து, எள், கடலை, பருத்தி, கரும்பு ஆகியவற்றை சாகுபடி செய்ய வேண்டும். மேலும் விரிவாக்க மையங்களில் வழங்கப்படும் உயிர் உரங்கள், நுண் சத்து உரங்கள் ஆகியவற்றை தவ றாமல் தங்கள் வயலில் இட்டு பயன்படுத்திட வேண்டும் என்றார். பின்னர் அம்மாபேட்டை விரிவாக்க மையத்தை ஆய்வு செய்தார்.