திருச்சியில் கலைஞர் நூலகம் அமைக்க அரசாணை வெளியீடு
சென்னை, டிச.18- கடந்த ஜூன் 27 இல் சட்டப்பேரவையில் வெளியிட்ட அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கலைஞர் பெயரி லான நூலகத்தை ரூ.290 கோடி மதிப்பீட்டில் அமைப்ப தற்கான நிர்வாக அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசாணை மூலம் வழங்கியுள்ளார். அதன்படி, திருச்சி கிழக்கு வட்டம், செங்குளம் மற்றும் கோ.அபிஷேகபுரம் கிராம நகரளவையில் 1,97,337 சதுரடி அளவில் நூலகக் கட்டடம், மின் பணிகள் ரூ.235 கோடி திட்ட மதிப்பீட்டில் கட்டுவதற்கு பொதுப்பணித் துறையிடம் இருந்து விரிவான திட்ட மதிப்பீடு மற்றும் வரைபடம் பெறப்பட்டுள்ளது. மேலும் நூலகத்திற்கு தேவையான நூல்கள் மற்றும் மின்நூல்கள் ரூ.50 கோடி மதிப்பிலும் மற்றும் தொழில்நுட்ப சாதனங்கள் ரூ.5 கோடி என மொத்தம் ரூ.290 கோடி மதிப்பில் அமைப்பதற்கு தமிழ்நாடு நிதிக் குறியீடு விதி 99 இன்படி முன்பணம் பெற்று செலவினம் மேற் கொள்ள நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்குமாறு தமிழக அரசு அரசாணை வெளி யிட்டுள்ளது.
நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டை, டிச.18: இளைஞர்களை, தனியார் துறைகளில் பணிய மர்த்தம் செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிலான தனி யார் துறை வேலைவாய்ப்பு முகாம் டிச.20 அன்று புதுக் கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் காலை 10 மணி முதல் நடை பெற உள்ளது. இம்முகாமில் 15-க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவ னங்கள் மற்றும் திறன்பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். முகாமில், எட்டாம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு உள்ளிட்ட கல்வித் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் பங்கேற்க லாம். மேலும், வேலைநாடும் இளைஞர்கள், தமிழ்நாடு தனியார்துறை வேலைவாய்ப்பு இணையமான www.tnprivatejobs.tn.gov.in மூலம் வாயிலாக பதிவு செய்து பயன்பெறுமாறு மவாட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளார்.
கான்கிரீட் குழாய்களால் விபத்து அபாயம்
அறந்தாங்கி, டிச.18 - புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியை அடுத்த மணமேல்குடியில் மழைநீர் வடிகாலுக்காக தோண்டப் பட்ட கான்கிரீட் குழாய்களை அப்புறப்படுத்தாததால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது. சென்னை - கன்னியாகுமரி கிழக்கு கடற்கரைச் சாலையில் ஆயி ரக்கணக்கான வாகனங்கள் இந்தப் பகுதியை கடந்து செல்வதால், இந்த இடத்தில் எதிரே வரும் வாகனங் களுக்கு இடையூறாக சாலையை ஆக்கிரமித்துள்ளன இக்குழாய்கள். எனவே விபத்து நிகழும் முன் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீதிமன்றத்தில் மருத்துவ முகாம்
பெரம்பலூர், டிச.18 - பெரம்பலூர் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட சட்டப்பணிகள் ஆணை குழு சார்பில் மருத்துவ முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் தலை வரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமாகிய பல்கீஷ் தலை மையேற்று மருத்துவ முகாமினை துவக்கி வைத்தார். இதில் மாவட்ட நீதிபதிகள், வழக்கறிஞர்கள், நீதி மன்ற ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட 100-க்கும் மேற்பட்டோர் மருத்துவ பரிசோதனை செய்து கொண்ட னர். அனைவருக்கும் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு டிச.21 இல் திருக்குறள் வினாடி-வினா தேர்வு
தஞ்சாவூர், டிச.18 - தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில், விருது நகர் மாவட்ட நிர்வாக ஒருங்கிணைப் பில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரி யர்களுக்கான மாநில அளவிலான திருக்குறள் வினாடி-வினா முதல் நிலை போட்டித் தேர்வு டிச.21 அன்று தஞ்சா வூர் மன்னர் சரபோஜி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பிற்பகல் நடைபெற உள்ளது. தேர்வில் பங்குபெறும் தேர்வா ளர்கள் தங்கள் அலுவலகத்தில் பணிபுரி வதற்கான அடையாள அட்டை கொண்டு வந்தால் மட்டுமே தேர்விற்கு அனு மதிக்கப்படுவர். மேலும், தேர்வு நேரத்திற்கு 1 மணி நேரம் முன்னதாக தேர்வு கூடத்திற்கு வருகை தர வேண்டும். கைப்பேசி, ஸ்மார்ட் வாட்ச், புளுடூத் ஆகிய உபகரணங்கள் தேர்வின் போது அனுமதிக்கப்பட மாட்டாது. மேற்படி தேர்வு கொள்குறிவகை (Objective Type Test) முறையில் நடை பெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் தகுதிபெறும் மூன்று குழுக்கள் (3X3=9 நபர்கள்) தேர்வு செய்யப்பட்டு டிச.28 அன்று விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் இறுதிப்போட்டிக்கு அனுப்பி வைக்கப்படுவர். விருது நகர் மாவட்டத்தில் டிச.28 அன்று நடை பெறும் இறுதிப் போட்டித் தேர்வில் தேர்ந்தெடுக்கப் படுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.2 லட்சம், இரண்டாம் பரிசு ரூ.1.50 லட்சம் மற்றும் மூன்றாம் பரிசு ரூ.1 லட்சம், மேலும் சிறந்த மூன்று குழுக் களுக்கு தலா ரூ. 25 ஆயிரம் வழங்கப் பட உள்ளது. எனவே, தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள், அரசு பள்ளி ஆசிரியர்கள், அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள், தனி யார் பள்ளி ஆசிரியர்கள், அரசு மற்றும் தனியார் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தொழில்நுட்பக் கல்வி, பட்டயக் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசி ரியர்கள் கலந்து கொள்ளலாம். இப்போட்டிக்கு தஞ்சாவூர் மாவட்டத் தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் ஜ.சபீர்பானு ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் விபரங்களை ஒருங்கிணைப்பாளரின் 9842553496 என்ற எண்ணில் கேட்டுப் பெறலாம். மேற்காணும் துறையில் பணி புரியும் அலுவலர்கள் தங்கள் அலுவல கத்தின் மூலமாக தங்கள் விபரங்களை (http://bit.ly/4ggzf5s) என்ற இணைப்பில் பதிவிடுமாறு மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
கொலை வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை
புதுக்கோட்டை, டிச.18 - புதுக்கோட்டை அருகே 2018இல் நடந்த கொலை வழக்கில் இரு குற்ற வாளிகளுக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்கொலையாக காட்டப்பட்ட சண்முகம் என்பவரின் மரணம், அவரது மாமியார் செல்வி, ஆறு முகம் ஆகியோரால் திட்டமிட்டு நிகழ்த்தப்பட்ட கொலை என நிரூ பிக்கப்பட்டது. கொலை, சதி ஆகிய இரு குற்றங்களுக்காக இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூபாய் ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.
ஐஎஸ்ஐ முத்திரையற்ற பொருட்கள் மீது நடவடிக்கை
தஞ்சாவூர், டிச.18 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வாஷிங் மிஷின், மின்சார சமையல் பாத்திரம், நீர் சூடேற்றி போன்ற வீட்டு உபயோக மின் சாதனங்கள் இந்திய அரசின் தரக்கட்டுப்பாட்டு சான்றிதழ் பெற்றி ருக்க வேண்டும். அதேபோல் கட்டுமானப் பொருட் களான இரும்பு தகடுகள், கம்பிகள், துருப்பிடிக் காத எஃகு பொருட்கள் மற்றும் சிமெண்ட் ஆகிய வற்றிற்கும் இந்திய தரச்சான்று கட்டாயமாக்கப் பட்டுள்ளது. இவற்றை கண்காணிக்க மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற் கொள்வர். விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.
பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த கோரிக்கை
தஞ்சாவூர், டிச.18 - தஞ்சாவூர் எல்ஐசி அலுவலக வளாகத்தில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஓய்வூதியர் சங்கத்தின் சார்பில் செவ்வாயன்று தலைவர் டி.ராஜசேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஓய்வூதியர் சங்க நிர்வாகி கே.பாலசுப்பிரமணியம் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தில், ஒன்றிய அரசு ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இன்சூரன்ஸ் சட்டத் திருத்தங்களை கைவிட வேண்டும். மூத்த குடிமக்களுக்கு ரயில் பயணச் சலுகையை மீண்டும் வழங்க வேண்டும். எல்ஐசி, ஜிஐசி நிர்வாகம் கருணைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும். மருத்துவக் காப்பீடு பிரிமியத்திற்கான ஜிஎஸ்டி வரியை ரத்து செய்ய வேண்டும். மக்களுக்கு சேவை செய்யும் பொதுத்துறை களான எல்ஐசி, ஜிஐசி நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது என்பன உள்ளிட்ட கோரிக்கை கள் ஒன்றிய அரசுக்கும், எல்ஐசி நிர்வாகத்திற்கும் முன்வைக்கப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் முதல் நிலை அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜெய்சங்கர், காப்பீட்டுக் கழக ஊழியர் சங்க தலைவர் எஸ்.செல்வராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றி னர். ஓய்வூதியர் சங்கத்தின் நிர்வாகி எம்.ரவிசங்கர் நன்றி கூறினார்.
தாலுகா காவல் நிலையத்தில் திருவாரூர் ஆட்சியர் ஆய்வு
திருவாரூர், டிச.18 - திருவாரூர் தாலுகா பகுதிகளில் புதனன்று ‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தின்கீழ் காலை 9 மணி முதல் வியாழனன்று காலை 9 மணி வரை தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ ஆய்வு மேற்கொண்டு வருகிறார். திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் ஆட்சியர் சாருஸ்ரீ திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, காவல் ஆய்வா ளர் சத்யாவிடம் காவல் நிலைய எல்லைப் பகுதிகளில் குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது குறித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் விவரம் குறித்தும் கேட்டறிந்தார். மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எடுக்கப்பட்ட நட வடிக்கை குறித்தும், அதற்கு உரிய முறையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதா என கேட்ட றிந்தார். மேலும் கைதிகளின் சிறைகளை நேரில் பார்வை யிட்டார். குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளுக்கு பின்னர், முதல் முறையாக தாலுகா காவல் நிலையத்தில் மாவட்ட ஆட்சி யர் நடத்திய ஆய்வு போலீசார் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தியாகராஜர் ஆராதனை விழா
தஞ்சாவூர், டிச.18 - திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான ஸ்ரீ தியாகராஜ சுவாமிகளின் 178 ஆவது ஆராதனை விழா ஜன. 14 முதல் 18 வரை நடைபெறவுள்ளது. நிறைவு நாளில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பாடி இசையஞ்சலி செலுத்துவர். விழாவுக் கான பந்தல் கால் நடும் நிகழ்வு டிச.22 அன்று நடை பெறவுள்ளது.
தகவல் அறியும் உரிமை சட்ட விழிப்புணர்வு முகாம்
புதுக்கோட்டை, டிச.18 - தகவல் அறியும் உரிமை சட்டம் விழிப்புணர்வு முகாம் தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர் செல்வ ராஜ் தலைமையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் முன்னிலையில் அண்மையில் நடைபெற்றது. அனைத்து துறை பொது தகவல் அலுவலர்களுக்கும் தகவல் அறியும் உரிமை சட்டம் 2005-இன் கீழ் வரப் பெறும் மனுக்களின் மீது உரிய காலத்தில் எவ்வாறு நடவ டிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு தகவல் ஆணை யத்தின் ஆணையரால் வழங்கப்பட்டது. முன்னதாக தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் ஆணையர் செல்வராஜ் மனுதாரர்களையும், பொது தகவல் அலுவலர்களையும் விசாரணை மேற்கொண்டார். இதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் துறை சார்ந்த 07 வழக்குகளும், ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த 23 வழக்கு களும் என மொத்தம் 30 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
ஓய்வூதியர் தின கருத்தரங்கம்
புதுக்கோட்டை, டிச.18 - தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில் தேசிய ஓய்வூதியர் தின கருத்த ரங்கம் புதுக்கோட்டையில் செவ்வாயன்று நடைபெற்றது. கருத்தரங்கிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் சரவணன் வகித்தார். மாவட்டச் செயலாளர் செயபா லன் ஓய்வூதியர் தின நோக்கங்கள் குறித்துப் பேசினார். மாநிலச் செயலாளர் க.கருப்பையா சிறப்புரையாற்றி னார். மாவட்டக் கருவூல அலுவலர் திருமதி சுப.காந்தி மதி 80 வயதான ஓய்வூதியர்களுக்கு பொன்னாடை அணி வித்து பாராட்டுரை ஆற்றினார். முன்னதாக மாவட்ட இணைச் செயலாளர் சரஸ்வதி வரவேற்க, மாவட்டப் பொருளாளர் கிருஷ்ணன் நன்றி கூறினார்.
பள்ளி செல்லா 2 மாணவர்கள் மீண்டும் பள்ளியில் சேர்ப்பு
அறந்தாங்கி, டிச.18 - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பள்ளி செல்லா இரண்டு மாணவர்கள் சேர்க்கப்பட்டனர். இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து மணமேல்குடி குடியிருப்பில் வசித்து வரும் முகமது நஸ்மின், அசீதுஹ மதியா என்ற மாணவி இதுவரை பள்ளிக்கு செல்லாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இவர் தற்போது மண மேல்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் மூன்றாம் வகுப்பில் சேர்க்கப்பட்டார். இதேபோல் பட்டுக்கோட்டை பகுதியில் இருந்து துர்க்கேஸ்வரன் என்ற மாணவர் இடம்பெயர்ந்து மண மேல்குடி குடியிருப்பில் வசிப்பது தெரிய வந்தது. இம்மாண வர் கறம்பக்குடி ஒன்றியத்தில் ராங்கியன் விடுதி பள்ளியில் படித்து வந்ததாக தகவல் தெரிவித்தார். தொடர்ந்து மாணவர் நான்காம் வகுப்பில் பள்ளியில் சேர்க்கப்பட்டார். இரண்டு மாணவர்களையும் பள்ளியில் சேர்ப்பதற்காக மணமேல்குடி வட்டார வளமைய மேற்பார்வையாளர் (பொ) சிவயோகம் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர் வீரமணி மற்றும் ஆசிரியர் உமா ஆகியோர் முயற்சிகளை மேற்கொண்டனர்.
டிச.20-இல் வேலைவாய்ப்பு முகாம்
தஞ்சாவூர், டிச.18 - தஞ்சாவூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் டிச.20 அன்று தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடை பெற உள்ளது. முன்னணி நிறுவனங்கள் 100-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நேரடி தேர்வு நடத்தவுள்ளன. 10-ஆம் வகுப்பு முதல் பட்டதாரிகள் வரை இதில் பங்கேற்க லாம். மேலும், விவரங்களுக்கு 04362-237037 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார். அரியலூர் அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் டிசம்பர் 20 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும். 100-க்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்களுக்கு நேரடித் தேர்வு நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் பொ. ரத்தினசாமி தெரிவித்துள்ளார். தராசு மறுமுத்திரை முகாம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா வில் டிசம்பர் 18 முதல் 20 வரை தராசு மறுமுத்திரை முகாம் நடை பெறவுள்ளது. அனைத்து வகை தராசுகளுக்கும் டிச.31, 2024 -க்குள் மறுமுத்திரை பெற வேண்டும். தவறும் வணிகர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் என தொழிலாளர் துறை உதவி ஆணையர் தங்கராசு எச்சரித்துள்ளார்.
பழுதடைந்த தொகுப்பு வீடுகள்: புதிய வீடு கட்டித் தரக் கோரிக்கை
புதுக்கோட்டை, டிச.18 - புதுக்கோட்டை மாவட்டம் குன்றான்டார் கோவில் வட்டத்தைச் சேர்ந்த ஒடுக்கூர் காட்டுமருதம்பட்டியில் பழுதடைந்துள்ள அரசுத் தொகுப்பு வீடுகளை இடித்துவிட்டு அதே இடத்தில் புதிதாக கட்டித் தர வேண்டும் என அப்பகுதி பெண்கள் ஆட்சி யரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள் கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில் அவர்கள் அளித்த மனு வில், “கடந்த 1991இல் மு.கருணாநிதி முதல்வராக இருந்த போது இந்தப் பகுதி யில் 20 குடும்பங்களுக்கு தொகுப்பு வீடுகள் கட்டித் தரப்பட்டன. அந்த வீடுகள் தற்போது முற்றிலும் பழுதடைந்து காணப்படுகின்றன. எனவே, அவற்றை முழுமையாக இடித்து அப்புறப்படுத்தி விட்டு, அதே இடத்தில் புதிய வீடுகளை அரசு கட்டித் தர வேண்டும்” என குறிப்பிடப் பட்டுள்ளது. மஞ்சுவிரட்டு நடத்த அனுமதி கோரி புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி வட்டம் மேலபொன்னன்விடுதியைச் சேர்ந்த இளைஞர்கள், தங்கள் பகுதியில் கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு வடமாடு மஞ்சுவிரட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்ததாகவும், அதன்பிறகு சில சூழல்கள் காரணமாக நிறுத்தப்பட்டதாகவும், தற்போது வரும் பிப். 21, 22, 23 தேதிகளில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும் எனவும் கோரி மனு அளித்தனர். கோவில் திருப்பணியில் புறக்கணிக்கப்படுவதாக... புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூரிலுள்ள சிறீ பாலபுரீசு வரர் கோவிலின் திருப்பணிகள் நடைபெற்று வரும்போது ஆதிதிராவிடர் குடியிருப்பி லுள்ள மக்களிடம் வரி வாங்கவில்லை என்றும், திருப்பணியில் தங்களையும் இணைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரி யும் அப்பகுதி மக்கள் மனு அளித்தனர்.
கொள்ளிடம் ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
கும்பகோணம், டிச.18- மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117.57 அடியை எட்டியுள்ளதால், அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிக்கிறது. இதனால் அணைக்கு வரும் உபரிநீர் மற்றும் அதற்கு கீழ்பகுதியில் (Down Stream) உள்ள கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரி நீரும் காவிரி ஆற்றில் சுமார் 35,000 கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. தண்ணீரின் அளவு மேலும் படிப்படியாக அதிகரிக்கப் படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. எனவே காவிரியில் திறந்து விடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு மேல், அதிகப் படியாக கொள்ளிடம் ஆற்றில் திறந்து விடப் படுவதாலும், இது படிப்படியாக நீர்வரத்திற்கு ஏற்ப சுமார் 60,000 கனஅடி வரை உயர்த்தப்பட வாய்ப்புள்ளதாலும், கும்பகோணம் அருகே உள்ள கொள்ளிட கரையோரம் மற்றும் தாழ்வானப் பகுதி களில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாது காப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும். கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிக மாக இருப்பதால் ஆற்றில் இறங்க வேண்டாம் எனவும், ஆற்றை கடக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது. உயிர் மற்றும் உடைமைகளின் பாது காப்பு கருதி அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் பாதுகாப்பான இடத்திலும், எச்சரிக்கையாகவும் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விவசாயிகள் குறைதீர் கூட்டம்
புதுக்கோட்டை, டிச.18 - புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் டிச.20 அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி யரகத்தில் ஆட்சியர் மு.அருணா தலைமை யில் நடைபெற உள்ளது. விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு பயிர் சாகு படிக்கு தேவையான நவீன தொழில்நுட் பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு விவரங்கள் மற்றும் வேளாண் உழவர் நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் மானி யத் திட்டங்கள் குறித்து தெரிந்துகொள்வ துடன் தங்களது கோரிக்கைகளையும் தெரி வித்து பயன்பெறுமாறு மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.