districts

img

முறைசாரா தொழிலாளர்கள் பெருந்திரள் ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, டிச.27 - பொங்கல் பண்டிகை கால நிதி  ரூ.5 ஆயிரம் வழங்கக் கோரி பெருந் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளர்கள் அனை வருக்கும் வேஷ்டி, சேலை பொங்கல்  தொகுப்புடன் ரூ.5000 வழங்க  வேண்டும். வீடு கேட்டு விண்ணப்பித் துள்ள அனைத்து கட்டுமானத் தொழி லாளிகளுக்கும் நிபந்தனைகளை தளர்த்தி வீடு வழங்க வேண்டும். பென்சன் ரூ.3000 வழங்க வேண்டும். நேரடிப் பதிவை துவங்க வேண்டும். கட்டுமான தொழிலாளி மற்றும் ஓய்வூதியம் பெரும் தொழி லாளி மரணம் அடைந்தால் உதவித் தொகையை விரைந்து வழங்க வேண்டும். ஆன்லைன் சர்வரை சரிப்படுத்த வேண்டும். நலவாரிய கூட்ட  முடிவுகளை அமலாக்க அர சாணை வெளியிட வேண்டும். மாவட்ட  ஆட்சியர் தலைமையில் கண்கா ணிப்புக்குழு கூட்டத்தை மாதந்தோ றும் கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். பெண் தொழிலாளிகளுக்கு 55  வயதில் ஓய்வூதியம் வழங்க வேண் டும். சிமெண்ட், மணல், செங்கல், ஜல்லி, கம்பி, எம்.சாண்ட், பி.சாண்ட் விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு கட்டுமானத் தொழிலாளர் சங்கம் சார்பில் வெள்ளியன்று மாநிலம் முழு வதும் பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு திருச்சி மாவட்ட கட்டு மானத் தொழிலாளர் சங்கம் சார்பில்  மன்னார்புரத்தில் உள்ள தொழிலா ளர் நலவாரிய அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட் டத்திற்கு கட்டுமான சங்க மாவட்ட பொதுச் செயலாளர் சந்திரசேகரன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன், மாவட்டத் தலைவர் சீனிவாசன், மாவட்டப் பொரு ளாளர் மணிகண்டன், மாநிலக் குழு உறுப்பினர் செல்வி, சிஐடியு புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், கட்டுமான சங்க புறநகர் மாவட்டத் தலைவர் தியாகராஜன், புறநகர் மாவட்டச் செயலாளர் பூமாலை ஆகி யோர் பேசினர். மாவட்ட பொருளாளர் உலகநாதன் நன்றி கூறினார். தஞ்சாவூர் தஞ்சை தலைமை தபால் நிலை யம் முன்பாக, சிஐடியு கட்டுமான தொழி லாளர் சங்க மாவட்டச் செயலாளர் இ.டி.எஸ்.மூர்த்தி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் சி.ஜெயபால், மாவட்ட துணைத் தலைவர் து.கோவிந்த ராஜு, முறைசாரா சங்க மாவட்டச் செய லாளர் பி.என்.பேர் நீதி ஆழ்வார், சுமைப் பணி சங்க மாவட்டச் செய லாளர் த.முருகேசன், சிஐடியு மாவட்டத்  துணைச் செயலாளர்கள் கே.அன்பு, சா.செங்குட்டுவன் ஆகியோர் உரை யாற்றினர். போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். திருவாரூர் திருவாரூர் மாவட்ட நலவாரிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அமைப்பின் மாவட்டத் தலைவர் டி.ரமேந்திரன் தலைமை வகித்தார். மாவட்டத்  துணைத் தலைவர் கே.வேணு கோபாலன் முன்னிலை வகித்தார். சிஐடியு மாவட்டச் செயலாளர் டி.முரு கையன், தலைவர் எம்.கே.என்.அனிபா, கட்டுமான சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.பி.ஜோதி பாசு ஆகியோர் கோரிக்கையை நிறை வேற்றிட கோரி உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் அமைப்பின் மாவட்டப்  பொருளாளர் எஸ்.பிலிப் ராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். பெரம்பலூர் பெரம்பலூர் காந்தி சிலை முன்பு அனைத்து வகையான கட்டுமானம் மற்றும் உடல் உழைப்பு தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு, மாவட்டச் செயலாளர் பி. ஆறுமுகம் தலைமை வகித்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.அழகர், மாவட்ட துணைத் தலைவர் ஏ.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டத் தலைவர் ஏ.ரெங்கநாதன், மாவட்டச் செயலாளர் எஸ்.அகஸ்டின்  ஆகியோர் கண்டன உரையாற்றினர்.