districts

img

தத்தனூர் மீனாட்சி ராமசாமி பள்ளியில் பொங்கல் விழா

கோவை, ஜன.10- கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெள்ளி யன்று நடைபெற்ற சமத்துவப் பொங்கல் விழாவில், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அரசு அதிகாரிகள்,  ஊழி யர்கள் பெரும் உற்சாகத்துடன் பங்கேற்றனர்.  தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை வர வேற்கும் விதமாக, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவ லக வளாகத்தில் சமத்துவப் பொங்கல் விழா உற்சாக மாக கொண்டாடப்பட்டது.  அரசு அதிகாரிகள் மற்றும்  ஊழியர்கள் பாரம்பரிய வேட்டி, சேலை அணிந்து  பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் கொண்டாடினர். இந்த பொங்கல் விழாவில் அரசு ஊழியர்கள் பாட்டுக்கு  பாட்டு பாடல் பாடியும், ஜமாப் இசைக்கு ஏற்ற நடனமாடி னர்.  விழாவில் கலந்து கொண்ட மாவட்ட வருவாய் அலு வலர் சர்மிளா திரைப்பட பாடலை பாடி அரசு ஊழியர் களை உற்சாகப்படுத்தினார்.  தொடர்ந்து மாவட்ட ஆட்சி யர், மாநகராட்சி ஆணையாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்ட கயிறு இழுக்கும் போட்டிகள், உறியடித்தல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. மேலும் பொங்கல் விழா நடைபெற்ற வளாகத்தில் அரசு துறை சார்ந்து பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டது. இதேபோன்று, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவ லகத்தில் பொங்கல் விழாவில் சார் ஆட்சியர் அ.கேத்த ரின் சரண்யா மற்றும் அலுவலர்கள் உற்சாகமாக பங் கேற்றனர்.