திருவாரூர், ஜன.28 - ஐக்கிய விவசாயிகள் முன்னணி திருவாரூர் மாவட்டக் குழு சார்பாக நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை. செல்வராஜிடம் மனு அளிக்கப்பட்டது. ஐக்கிய விவசாயிகள் முன்னணி மாவட்ட ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளருமான கே.ஆர்.ஜோசப் தலைமையில், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ். தம்புசாமி முன்னிலையில் அளிக்கப் பட்ட மனுவில், “வேளாண்மை சந்தைப் படுத்துதல் குறித்த தேசிய கொள்கை கட்டமைப்பு சட்டத்தை திரும்ப பெறு வது, குறைந்தபட்ச ஆதரவு விலையை சட்டப்பூர்வமாக்கவும், உண்ணா விரதம் இருக்கும் விவசாய சங்க தலை வர் உயிரைக் காப்பாற்ற விவசாயி களை அழைத்து பேசுவது, மின்சாரம் தனியார்மயமாவதை கைவிட கோரி யும் கடந்த 2021 நவ.19 இல் கொடுத்த வாக்குறுதிப்படி கோரிக்கைகளை நிறைவேற்ற நாடாளுமன்றத்தில் வலி யுறுத்த வேண்டும். விவசாயிகளுக்கு ஆதரவாக பேச வேண்டும்” என தெரி விக்கப்பட்டுள்ளது. மனு அளிக்கும்போது தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட நிர்வாகிகள் டி.தியாகராஜன், ஜி.பவுன் ராஜ், கே.சுப்பிரமணியன், கே.நாக ராஜன் மற்றும் மாவட்டக் குழு உறுப்பி னர்கள் உடனிருந்தனர்.