தஞ்சாவூர், ஜன.18 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கில், ஏசிஇ டிரஸ்ட் சார்பில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா சங்கத் தலைவர் என்.இராம நாதன் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. சங்கத்தின் செயலாளர் விஸ்வ.இராம்குமார் வரவேற்றார். தஞ்சாவூர் மருதுபாண்டியர் கல்வி நிறுவனங்க ளின் தலைவர் கொ.மருது பாண்டியன், பேராவூரணி மருத்துவர் துரை.நீல கண்டன், அழகப்பா கல்விக் குழும சட்ட ஆலோசகர் எம்.ஜி.பாலன் ஆகி யோர் முன்னிலை வகித்தனர். விழாவில், பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமார், ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் அன்புச் செல்வன் ஆகியோர் வாழ்த்திப் பேசி னர். ஓய்வுபெற்ற ஏடிஜிபி வி.வனிதா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசியதாவது: பெண்கள் முன்னேற்றத்தைப் பற்றி பேசிப் பேசி ஓய்ந்த தலைவர்களும் இருக்கிறார்கள். செய்கிற தலைவர் களும் இருக்கிறார்கள். செய்யப் போகிற தலைவர்களும் வருவார்கள். மதுரை மாவட்டம் கம்யூனிச இயக்கம் வலுவாக இருக்கக்கூடிய இடம், பொதுவுடமை இயக்கத் தோழர்கள் நிறைய பேர் என்னோடு நட்புணர்வோடு பழகுவார்கள். பெரி யாரைப் பற்றி பேசும் நீங்கள், மூட நம்பிக்கை பற்றியும் பேசுவது ஏன் என என்னோடு விவாதிப்பார்கள். பெரியாரைப் பற்றி பேசுவதனால் தான், நான் ஆன்மீகத்தை பற்றி தெளி வாக புரிந்து கொண்டேன். பெரியார் எந்த காலத்திலும் தன்னுடைய கருத்து களை எவர் மீதும் திணித்ததில்லை. நான் சொல்வதை நீங்கள் சிந்தித்து அதில் சரியானதை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று பேசியவர் பெரியார். சிந்திக்க வேண்டும் என்று சொன்னவர், பகுத்தறிவை உபயோகிக்க வேண்டும் என்று சொன்னவர், பெண்கள் படிக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார். அவருடைய கருத்துகளை இன்று திட்ட மிட்டு மறைக்கின்றனர். நான் ஒரு காவல்துறை அதிகாரியாக தன்னம்பிக் கையோடு செயல்பட காரணமாக இருந்தவர் பெரியார் என்று அவர் பேசினார். விழாவில் பொதுப் பணித்துறை பொறியாளர் சி.திலீபன், சென்னை ஸோகோ கார்ப்பரேஷன் சைபர் செக்யூ ரிட்டி தலைமைப் பொறியாளர் எஸ். சசிகுமார் ஆகியோர் பாராட்டப்பட்ட னர். மேலும் 10 ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு, நீட் தேர்வில் உயர் மதிப்பெண் பெற்ற அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்கள், மாநில அளவில் உயர் கல்வி விளையாட்டு மற்றும் இதர துறைகளில சாதனை படைத்தவர்களை பாராட்டி ரொக்க பரிசு வழங்கப்பட்டது. விழாவில் 80 பேருக்கு சுமார் ரூ.4 லட்சம் ஊக்கத் தொகையாக வழங்கப் பட்டது.