districts

img

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

பெரம்பலூர், ஜன.24 - பெரம்பலூர் மாவட்ட போக்குவரத்து காவல்துறை மற்றும் தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்கள் சார்பில் 36 ஆவது தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தையொட்டி, பெரம்பலூர் பாலக்கரையில் இருந்து சங்குபேட்டை, பழைய பேருந்து நிலையம் வரை சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.  இந்த விழிப்புணர்வு பேரணியை பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் கிரேஸ் பச்சாவ் மற்றும் பெரம்பலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பச்சேரா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இதில் சீனிவாசன் கலை மற்றும் அறிவியல் கல்லூரியைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.