districts

img

பொதுவெளியில் சிறுநீர் கழித்தால் சென்சார் மூலம் ஒலிக்கும் அலாரம் தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் மாநகராட்சி ஏற்பாடு

தஞ்சாவூர், ஜன.9–  தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில், பொது வெளியில் சிறுநீர் கழிப்பதை தடுக்க, மாநகராட்சி நிர்வாகம் சார்பில், 50 அடி நீளம், 10 அடி அகலத்திற்கு துல்லியமாக ஆட்களை அடையாளம் காணும் வகையில், கண்காணிப்பு கேமராவுடன் கூடிய சென்சார் கருவியை சிறுநீர் கழிக்கும் பகுதியில் பொருத்தியுள்ளது. மேலும், அங்கு உள்ள இரும்பு தகரத்தில் இரவு நேரத்தில் சைரன் போன்ற விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த தகரத்தில் இருந்து சில அடி தூரத்தில் ஒரு கோடும் வரையப்பட்டுள்ளது. யாராவது சிறுநீர் கழிக்கும் நோக்கத்தில் இந்த கோடு அருகே வந்தால் சென்சார் மூலம் அலாரம் சைரன் போன்ற சத்தத்துடன், விளக்குகளும் எரியத் துவங்கி விடுகிறது. இதனால், சிறு நீர் கழிக்க வருபவர்கள் அங்கிருந்து  ஓடி விடுகிறார்கள். அதையும் மீறி  யாராவது சிறுநீர் கழித்தால், 5 முதல் 10 வினாடிகள் வரை இந்த அலாரம் ஒலித்துக்கொண்டே இருக்கி றது. இதுகுறித்து, மாநகர் நல  அலுவலர் கூறும்போது, தமிழகத்தி லேயே முதன்முறையாக இந்த  சென்சார் கருவி பொருத்தப்பட்டுள் ளது. ஒரு இடத்தில் சோதனை அடிப்ப டையில் பொருத்தப்பட்டுள்ளது. தொ டர்ந்து பேருந்து நிலையம் முழுவதும் பொருத்தப்பட்ட உள்ளது.  இந்தக் கருவி மழைக் காலங்களி லும் செயல்படும் தன்மை கொண்டது என்று தெரிவித்தார்.