districts

திருச்சி முக்கிய செய்திகள்

மயிலாடுதுறையில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு

மயிலாடுதுறை, பிப்.25-  மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு அரசின் 18 முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட்டன. 15 தொழில் முனைவோர்கள் நடத்தும் மருந்தகங்கள், 3 கூட்டுறவு நிறுவனங்கள் நடத்தும் மருந்தகம் என18 மருந்தகங்கள் திறக்கப்பட்டன.  மயிலாடுதுறையில் குமரன் நகரில், மாவட்ட ஆட்சியர் ஏ.பி. மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா முருகன், எம்.எல்.ஏக்கள் எஸ்.ராஜ்குமார், எம். பன்னீர்செல்வம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி மருந்தகத்தை பார்வையிட்டனர். அதேபோன்று மன்னம்பந்தல், சேந்தங்குடி, பெரியக்கண்ணாரத்தெரு, மணல்மேடு  , குத்தாலம் வட்டத்தில் திருவாலங்காடு, தரங்கம்பாடி, பொறையாறு, ராஜா வீதி, சீர்காழி வட்டத்தில் உமையாள்பதி, திருவெண்காடு, தென்பாதி, பிடாரி மேற்கு வீதி,  வைத்தீஸ்வரன்கோவில், சட்டநாதபுரம், எடமணல், பச்சைபெருமாள்நல்லூர் ஆகிய 18 இடங்களில் திறக்கப்பட்டது. அதன்படி, தரங்கம்பாடியில் முதல்வர் மருந்தகம் திறப்பு விழாவிற்கு பேரூராட்சி மன்றத் துணைத் தலைவர் பொன். ராஜேந்திரன் தலைமை வகித்தார். தமிழ் சுவிசேஷ லுத்தரன் திருச்சபை புது எருசலேம் ஆலயத்தின் ஆயர் சாம்சன் மோசஸ், மாசிலா நாதர் திருக்கோவில் அர்ச்சகர் பாலகுரு குருக்கள், தரங்கம்பாடி முஸ்லீம் ஜமாத் தலைவர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் முதல்வர் மருந்தகத்தை திறந்து வைத்து உரையாற்றினர் இந்நிகழ்ச்சியில் மீனவ பஞ்சாயத்தார்கள், திமுக நகரச் செயலாளர் முத்துராஜா மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

சாலைப் பணி, கட்டடப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா

தஞ்சாவூர், பிப்.25- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள தென்னங்குடியில், அய்யனார் கோவில் இணைப்பு சாலை ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படுகிறது. இதேபோல், ஆண்டிக்கச்சல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு சமையல் கூடம் ரூ.8.50 லட்சத்தில் அமைக்கப்படுகிறது.  இரு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா, செவ்வாய்க்கிழமை பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா. அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கா.செல்வேந்திரன், மா.சாமிநாதன், ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் வி.பாரதிதாசன், பள்ளி தலைமை ஆசிரியர் அன்பு மேரி, ஆசிரியர் நீலகண்டன், கிராமத்தினர் கலந்து கொண்டனர்.

‘பேருந்து நிலையத்தை அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன?’

மதுரை, பிப்.25- புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த அண்ணாதுரை என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார்.  அதில் “புதுக்கோட்டை மாவட்ட பேருந்து நிலை யத்தை இடித்துவிட்டு புதிதாக பேருந்து நிலையம் கட்ட  முடிவு செய்து அதற்கான டெண்டர் அறிவிப்பை மாவட்ட  ஆட்சியரும், நகராட்சி ஆணையரும் கோரியுள்ளனர். தற்காலிகப் பேருந்து நிலையத்திற்காக அருகில் இடம்  தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அங்கு கழிவறை, குடிநீர் போன்ற வசதிகள் இல்லை. இதனால்  பயணி கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவர். இந்த தொடர்பாக அதிகாரிகளிடம் மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகவே புதுக்கோட்டை பேருந்து நிலை யத்தை அடிப்படை வசதி உள்ள பகுதிக்கு இடமாற்றம் செய்யவும், அதுவரை வேறு இடத்திற்கு மாற்ற தடை விதித்தும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார். இந்த வழக்கை செவ்வாயன்று விசாரித்த நீதிபதி கள் நிஷா பானு, ஸ்ரீமதி அமர்வு  அடிப்படை வசதிகள் இன்றி தற்காலிக பேருந்து நிலையத்திற்கு அவசரமாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன? அடிப்படை வசதி களை செய்த பின்பு மாற்றலாமே? என கேள்வி எழுப்பி னர். மேலும் இது தொடர்பாக  மாவட்ட ஆட்சியரிடம் உரிய விளக்கம் பெற்று தெரிவிக்க உத்தரவிட்டு வழக்கு விசா ரணையை புதன்கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

விபத்தில் முதியவர் பலி

தேனி, பிப்.25- ஆண்டிபட்டி அருகே புலிமான்கோம்பை கிரா மத்தைச் சேர்ந்தவர் காமன்(76). இவர் கால்நடைகளை பரா மரித்து வருகிறார். கடந்த 23ம் தேதி தோட்டத்தில் மேய்ந்து  கொண்டிருந்த மாடுகளை பிடிக்க புலிமான்கோம்பை-வத்தலக்குண்டு சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, பின்னால் வந்த இருசக்கர வாகனம் மோதியது.  இதில் காமன் பலத்த காயமடைந்தார். மேல் சிகிச்  சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை யில் இருந்து திங்களன்று சிகிச்சை பலனின்றி உயிரி ழந்தார். ஆண்டிபட்டி போலீசார் டூவீலர் ஓட்டி வந்த  சித்தையகவுண்டன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிச்சை மணி(40) என்பவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து  வருகின்றனர்.

விருதுநகர் ஆட்சியர் நடவடிக்கை எடுப்பாரா?

ஸ்ரீவில்லிபுத்தூர், பிப்.25- விருதுநகர் மாவட்டம் சாத்தூர்  வட்டத்திற்கு உட்பட்ட குமாரலிங்க புரத்தில் கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வருபவர் அஜிதா. இவர் கடந்த 14ஆம் தேதி கனிம வள கடத்த லில் தொடர்புள்ளதாக கூறி மாவட்ட ஆட்சி யரால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 18ஆம் தேதி முதல் பல கட்ட போராட்டங்களை நடத்தி  வருகின்றனர். இதனால் கடந்த எட்டு நாட்களாக அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.  இந்நிலையில் தொடர்ந்து அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள், உடனடியாக கிராம நிர்வாக அலுவ லர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர கோரிக்கை விடுத்தனர். மாவட்ட ஆட்சியர் உடனடியாக தலை யிட்டு தீர்வு காண வேண்டும் என்றும் வலி யுறுத்தினர். போராட்டம் குறித்து கிராம நிர்வாக  அலுவலர்கள் சங்க மாவட்டச் செய லாளர் வில்லியாழ்வார் கூறுகையில், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலர் தனது பணியை சரியாக செய்துள்ளார். பணி நீக்கம் ரத்து குறித்து உறுதி எதுவும்  வழங்காத நிலையில் போராட்டம் தொடர்  கிறது. மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஓய்வூதிய பணப் பலன்கள் தாமதத்திற்கு 6% வட்டி வழங்க வேண்டும்

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு மதுரை, பிப்.25-  ஓய்வூதிய பண பலன்கள் வழங்க கால தாமதம் ஏற்பட்டால் காலதாமதமான மாதத்திற்கான வட்டியை வழங்கக் கோரி வழக்கு தொடரப்பட்டது. இதுதொடர்பாக, தென்காசி மாவட்டத் தைச் சார்ந்த வழக்கறிஞர் அருணகிரி, உயர்  நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல்  செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் 1977 இல் இருந்து சுகாதாரத் துறை யில் தொழில்நுட்ப உதவியாளராக பணி யாற்றி மே 2016 பணி ஓய்வு பெற்றேன். பின்னர் அரசிடம் இருந்து தனக்கு வர வேண்டிய ஓய்வூதியம் மற்றும் பிற பண பலன்கள் தரப்படவில்லை. இந்நிலையில் தனக்கு வரவேண்டிய பண பலன்களை வழங்கக் கோரி 2017 ஆம்  ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்  செய்திருந்தேன். அந்த மனுவை விசா ரணை செய்த உயர்நீதிமன்றம், உடனடி யாக பண பலன்கள் வழங்க உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் 2018 ஆம் ஆண்டு  பண பலன்கள் வழங்கப்பட்டது. ஆனால்  20 மாத காலதாமதம் செய்து எனக்கு வர  வேண்டிய பண பலன்கள் வழங்கப்பட் டது. எனவே அந்த 20 மாதத்திற்கான வட்டி யையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் மற்றும் மரியாகிளாட் ஆகியோர் முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் சங்கர  ராமசுப்பிரமணியன் ஆஜரானார். மனுவை  விசாரணை செய்து நீதிபதிகள் பிறப்பித் துள்ள உத்தரவில், மனுதாரருக்கு வழங்  கிய ஓய்வூதிய பண பலன்கள் காலதாம தத்திற்கான 6 சதவீத வட்டியை நான்கு வாரங்களுக்குள் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.