மயிலாடுதுறை, செப்.24 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடி வட்டம் சங்கரன்பந்தல் அருகி லுள்ள இலுப்பூரில் நடமாடும் நெல் உலர்த்தும் இயந்திர செயல் விளக்கப் பணிகளை விவசாயிகளுடன் மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். நடமாடும் நெல் உலர்த்தி மூலம் அறுவடை செய்த நெல்லின் ஈரப்பதத்தினை 21 சதவீதத்திலிருந்து 14 சத வீதம் என்ற அளவிற்கு குறைக்க முடியும். இதற்காக ஆகும் நேரம் 3 மெ.டன் நெல்லை 2 மணி நேரத்தில் உலரச் செய்து விடலாம். இதற்கு ஒரு டன்னிற்கு 2000- 2500 ரூபாய் செலவாகும். ஈரப்பதம் குறைக்கப்பட்ட நெல்லை அதிக நாட்கள் பாதுகாத்து இருப்பு வைக்க லாம். நெல்லின் தரம் கெடா மல் பாதுகாக்கப்படும். பூஞ்சாணம் போன்ற நோய் களிலிருந்து பாதுகாத்து அதிக நாள் இருப்பு வைக்கப் படும். நெல்லின் நிறம் மாறா மல் பாதுகாக்கப்படும் என வேளாண் துறை அதிகாரி கள் கூறினர். ஆய்வின் போது வேளாண் மைத்துறை இணை இயக்குநர் ஜெ.சேகர், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) செ. ஜெயபால், வேளாண்மை பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் ஸ்ரீதர், வேளாண்மை உதவி இயக்கு நர் ப.தாமஸ், வேளாண்மை உதவி அலுவலர் ரவிச்சந்தி ரன் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஆகி யோர் உடனிருந்தனர்.