திருச்சிராப்பள்ளி, ஏப்.12 - திருச்சி மாநகர் மாவட்ட சிஐடியு சுமைப் பணி தொழிற்சங்க சிறப்பு பேரவை கூட்டம் செவ்வாயன்று திருச்சி வெண்மணி இல்லத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சங்கத் தலைவர் சிவக்குமார் தலைமை வகித்தார். நடைபெற்ற பணிகள் குறித்து மாவட்டச் செயலாளர் ராமர் பேசினார். சிஐடியு மாநில பொதுச் செயலாளர் சுகுமார், மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மே தினத்தன்று சுமைப்பணி சங்கம் சார்பில் மாநகரில் 50 இடங்களில் கொடியேற்றுவது. இளைஞர்களுக்கு வேலை கேட்டு சென்னை, கன்னியாகுமரி, கோவை, புதுச்சேரி ஆகிய தமிழகத்தின் நான்கு முனைகளில் இருந்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சைக்கிள் பிரச்சார பயணம் ஏப்ரல் 21 ஆம் தேதி துவங்கி மே 1 ஆம் தேதி திருச்சியில் சங்க மிக்கிறது. அன்று திருச்சியில் அகில இந்திய பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி கலந்து கொள்ளும் பொதுக் கூட்டத் தில் 500 சுமைப்பணி தொழிலாளர்கள் பங்கேற் பது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் புதிய நிர்வாகிகளாக, தலை வராக எஸ்.ரெங்கராஜன், செயலாளராக ஆர். சிவக்குமார், பொருளாளராக ஜி.விஜய குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். மேலும் 17 பேர் கொண்ட நிர்வாகக் குழு, 30 பேர் கொண்ட மாவட்ட குழு தேர்வு செய்யப் பட்டது.