திருச்சிராப்பள்ளி, செப்.1- பிரதம மந்திரி விவசாயிகள் நிதி உதவி திட்டத்தில் நடைபெற்ற ஊழல், மோசடிகள் குறித்து சிபிசிஐடி விசா ரணைக்கு உத்தரவிட வேண்டும். கூட்டு றவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப் பாட்டுக்கு கொண்டு செல்லக்கூடாது. பேராவூரணி, சேதுபாவாசத்திரம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், ஒரத்த நாடு உள்ளிட்ட கடைமடைப் பகுதிக்கு முறை வைக்காமல் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட வேண்டும். கூட்டு றவு வங்கிகளில் விவசாயிகளுக்கு பயிர்க் கடன், நகைக்கடன் நிபந்தனையின்றி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநி லம் தழுவிய ஆர்ப்பாட்டம் செவ்வா யன்று நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி
திருச்சி மாநகர் மாவட்டக் குழு சார்பில் ஸ்ரீரங்கம் தாலுகா அலுவல கம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செய லாளர் கே.சி.பாண்டியன் தலைமை வகித்தார். மாநில துணைத்தலைவர் முகமதுஅலி கண்டன உரை யாற்றினார்.
தஞ்சாவூர்
தஞ்சை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் பி.செந்தில்குமார் தலைமை வகித் தார். மாநிலச் செயலாளர் சாமி.நட ராஜன் பேசினார். பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சங்க மாவட்ட துணைத் தலைவர் ஏ.கோவிந்தசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டங்களில் நிறை வாக வட்டாட்சியர்களிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. கும்பகோணம் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட் டத்திற்கு மாவட்ட துணை செயலாளர் கணேசன் தலைமை வகித்தார்.
திருவாரூர்
திருவாரூர் வட்டாட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு விவசாயிகள் சங்க ஒன்றி யச் செயலாளர் ஜி.பவுன்ராஜ் தலைமை வகித்தார். சங்க மாவட்டச் செயலா ளர் வி.எஸ்.கலியபெருமாள், மாவட்ட துணைத் தலைவர் எம்.சேகர் கண்டன உரையாற்றினர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா முன்பு நடை பெற்ற ஆர்ப்பாட்டத்தில் விவசாய சங் கம் சார்பில் மாவட்டச் செயலாளர் கே. மகாராஜன், முருகன், சங்கபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மயிலாடுதுறை வட்டாட்சியர் அலு வலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் எஸ்.துரை ராஜ் தலைமையில் கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.