திருச்சிராப்பள்ளி, மார்ச் 25- தமிழ்நாடு மருத்துவர் சமூக நலச்சங்கம் மற்றும் தமிழ்நாடு முடிதிருத்தும் தொழிலாளர் நலச்சங்க திருச்சிராப்பள்ளி வடக்கு மாவட்ட ஸ்ரீரங்கம் கிளை சார் பில் ஆலோசனைக் கூட்டம் ஸ்ரீரங்கத்தில் நடந்தது. வடக்கு மாவட்டத் தலை வர் சண்முகசுந்தரம் தலை மை வகித்தார். மாவட்டச் செயலாளர் சுரேஷ் அறிக்கை சமர்ப்பித்தார். மண்டல அமைப்புப் செய லாளர் செந்தில்குமார், மருத வீரன், மாரிமுத்து ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் மருத்துவர் சமூகத்தை மிகவும் பிற் படுத்தப்பட்டோர் பட்டிய லில் இருந்து பட்டியல் மற் றும் பழங்குடியினர் வகுப் பில் சேர்க்க வேண்டும். மருத் துவர் சமூக மக்களுக்கு சட்ட பாதுகாப்பு வழங்க வேண் டும். கோவில்களில் முடி எடுக்கும் தொழிலாளர்கள், நாதஸ்வர, தவில் இசைக் கலைஞர்களையும் அரசு ஊழியர்களாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.