tamilnadu

img

சொந்த ஊருக்கு அனுப்புக - வடமாநிலத் தொழிலாளர்கள் கோரிக்கை

தருமபுரி, மே 23-  தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வடமாநில தொழி லாளர்கள் தங்களை விரைவாக சொந்த  ஊருக்கு அனுப்ப கோரிக்கை விடுத்துள்ள னர். உத்தரபிரதேசம் மாநிலம் சித்தார் நகர் பகுதியைச் சேர்ந்த 39 தொழிலாளர்கள், கொரோனா வைரசால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக பென்னாகரம் பருவதனஅள்ளி சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப்பட் டுள்ளனர். இவர்கள், பென்னாகரம் பகுதி யில் கூலி வேலைகள் செய்து வாழ்ந்து வந் தனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவு நான்காவது கட்டத்தில் சில தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ள வடமாநிலத் தொழி லாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தமி ழக அரசு தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு செல்ல ஏற்பாடு செய்து அனுப்பி வருகிறது. எனவே, பென்னாகரம் சமுதாய நலக்கூடத்தில் தங்க வைக்கப் பட்டுள்ள 39 தொழிலாளா்களையும் தங் கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என இங்குள்ள கூலித் தொழி லாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.  இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகா ரியிடம் கேட்டபோது, 39 வடமாநில தொழி லாளர்கள் தங்கி இருப்பது உண்மைதான். அவர்களுக்கு உணவு உட்பட அனைத்து விதமான அடிப்படை வசதிகளும் செய்து கொடுத்திருக்கிறோம். அரசிடமிருந்து எங் களுக்கு முறையான அனுமதி இதுவரை வரவில்லை, வந்தவுடன் ஓரிரு நாட்களில் அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைப் பதற்கான ஏற்பாடு செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.