பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில், மாவட்ட குடிநீர் வடிகால் வாரிய தொழிலாளர் சங்கம் (சிஐடியு)- கிளையின் ஆலோசனை கூட்டம் சிஐடியு மாவட்ட துணைச் செயலாளர் ஏ.தீன் தலைமையில் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.யாசிந்து, சிஐடியு மாவட்டத் தலைவர் கே.முஹம்மது அலி ஜின்னா ஆகியோர் சிறப்புரையாற்றினர். இதில் 1766 கூட்டுக் குடிநீர் திட்டத்தில் வேலை செய்யக் கூடிய ஊழியர்களின் ஊதியம் சம்பந்தமாக அரசு அறிவித்த உத்தரவை அமல்படுத்தாத நிலை உள்ளது. எனவே அரசாரணையை அதை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.