districts

img

டங்ஸ்டன் திட்டம் ரத்து கோரி மேலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆர்ப்பாட்டம்

மதுரை, ஜன.10-  மதுரை மாவட்டம் மேலூர் அருகே, அரிட்டா பட்டி உள்ளிட்ட பகுதிகளில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் திட்டத்தை  ஒன்றிய அரசு ரத்து செய் யக்கோரி  வலியுறுத்தி, மேலூர் கர்னல் பென்னி குவிக் பேருந்து நிலையம் முன்பு விடுதலை சிறுத்தை கள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில்  ஜனவரி 10  அன்று ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  இதில் திருமாவளவன் பேசுகையில்,  அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைக்கும் திட் டத்தை இப்பகுதி மக்கள் மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழகமே எதிர்த்து வருகின்றது.  இத்திட்டத்தை திமுக உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் எதிர்த்ததால், வேறு வழியில்லாமல் அதி முகவும் எதிர்த்து உள்ளது. தற்போது, தமிழக பாஜக வும் எதிர்த்து வருகின்றது. ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்த போது, மாநில அரசு அனுமதி இன்றி இத்திட்டம் கண்டிப்பாக வராது என்று தெரிவித்தார்.  அரிட்டாபட்டி, மீனாட்சி புரம் உள்ளிட்ட பகுதிகளில் பல சமணர் படுக்கைகள் உள்ளன. இதன் மூலம், தமி ழர்கள் வரலாறு காக்கப் பட்டு வருகின்றது.  ஆயிரம் கிலோ பாறை உடைக்கபட்டால், 1 கிலோ அளவிலான டங்ஸ்டன் கனிமம் தான் கிடைக்கும். டங்ஸ்டன் கனிமம் எடுக்க அதிகப்படியான நிலத்தடி நீர் தேவைப்படும். இதன்  மூலம் கிடைக்கும் கழிவுகள்  அனைத்தும் இந்த மண்ணில் தான் கொட்டப்படும். இத னால்  காற்று, நீர், மண் மிகப் பெரிய அளவில் பாதிக்கப் படும். ஒன்றிய அரசுக்கு இரண்டே இரண்டு கோ ரிக்கை தான். இப்பகுதியில்  டங்ஸ்டன் கனிம திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். மேலூர் பகுதியை பாது காக்கப்பட்ட வேளாண் மற்றும் தொல்லியல் மண்ட லமாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசும் இப்பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக போரா டியவர்கள் மீது பதியப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று வலியு றுத்தினார்.  இந்த ஆர்ப்பாட்டத்தில் பிரபாகரன், துணை;ப பொ துச்செயலாளர் ஆற்றல் அரசு, மதுரை கிழக்கு மாவட்ட செயலாளர் அரச முத்துப்பாண்டியன் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.