districts

img

குத்தாலம் 4 ஆவது வார்டு சிபிஎம் வேட்பாளர் திருநர் ஆர்.சிநேகா வேட்புமனு தாக்கல்

மயிலாடுதுறை, பிப்.4 - மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் பேரூராட்சி 4 ஆவது வார்டு கவுன்சிலர் பத விக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் திருநர் ஆர்.சிநேகா  வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தார். 42 வயதான சிநேகா தென்னிந்திய திரு நங்கை கூட்டமைப்பின் மயிலாடுதுறை மாவட்ட தலைவியாக பொறுப்பு வகித்து வரு வதோடு, தொண்டு நிறுவனம் ஒன்றை  அமைத்து ஹெச்ஐவி, காசநோய் குறித்த  விழிப்புணர்வையும் பாதிக்கப்பட்டவர்க ளுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் விதமாக பல்வேறு உதவிகளையும் செய்து வரு கிறார். மேலும், கல்வி கற்க முடியாத நிலையிலுள்ள ஏழை, எளிய மாணவர்கள் பலரை படிக்க வைக்கிறார் என்பது குறிப்பி டத்தக்கது.  குத்தாலம் பேரூராட்சி 14 ஆவது வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளராக வட்டக்குழு உறுப்பினர் பா. சுந்தர், 2 ஆவது வார்டு வேட்பாளராக எஸ். சிவலிங்கம் ஆகியோரும் குத்தாலம் பேரூ ராட்சி தேர்தல் அதிகாரியிடம் வெள்ளிக் கிழமை வேட்பு மனு தாக்கல் செய்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஸ்டா லின். மாவட்டக்குழு உறுப்பினர் பா.ராம குரு மற்றும் கட்சி உறுப்பினர்கள் உடனி ருந்தனர்.