கரூர், அக்.10- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் க.பரமத்தி ஒன்றிய 8 ஆவது மாநாடு சின்னதாரா புரத்தில் நடைபெற்றது. ஒன்றிய குழு உறுப்பினர் ஆர்.செல்லக்கண்ணு தலை மை வகித்தார். ஒன்றிய முன் னாள் செயலாளர் கே.வி.பழனிசாமி செங்கொடியை ஏற்றி வைத்தார். ஒன்றிய குழு உறுப்பினர் சரவணன் வரவேற்றார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் சி.முருகேசன் மாநாட்டை துவக்கி வைத்து பேசினார். செயலாளர் ராஜா முகமது வேலையறிக்கை சமர்பித் தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.கந்தசாமி மாநாட்டை நிறைவு செய்து பேசினார். க.பரமத்தி ஒன்றிய புதிய செயலாளராக கா.கந்தசாமி உள்பட 9 பேர் ஒன்றிய குழு உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கூடலூர் கீழ்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட சின்ன தாராபுரம் தென்னிலை சாலையில் உள்ள பனை யம்பாளையம் புது கால னியில் பொதுமக்களுக்கு தெருவிளக்கு, குடிநீர், பொதுகழிவறை உள்ளிட்ட அடிப்படையை வசதிகளை செய்து கொடுக்க வேண் டும். பவித்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு உட்பட்ட பகுதி பொதுமக்க ளின் நீண்ட நாள் கோரிக்கை யான சாக்கடை கால்வாய், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், சாலை வசதிகள், தெரு விளக்குகள் அமைத்துக் கொடுக்க வேண்டும். சின்ன தாராபுரம் பேருந்து நிலை யத்தில் பயணிகளுக்கு நிழற் குடை அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.