மதுரை, ஜன.10- அகில இந்திய இன்சூரன்ஸ் பென்சனர்கள் சங்கம் மதுரைக்கோட்டம் சார்பில், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், ஊதிய உயர் வின் போது பென்ஷன் தொ கையும் உயர்த்தப்ப வேண்டும். பொதுத்துறை பொது இன்சூரன்ஸ் ஓய்வூ தியர்களுக்கு குடும்ப ஓய்வூ தியம் 30 உயர்த்தப்பட வேண்டும் என்று வலியு றுத்தி தர்ணா போராட்டம் மதுரை எல்ஐசி கோட்ட அலு வலக வளாகம் செல்லூரில் சங்கத் தலைவர் ஜே. கோ பாலகிருஷ்ணன் தலைமை யில் வெள்ளியன்று நடை பெற்றது. துணைத் தலைவர் ஆர். கண்ணன் வரவேற்று பேசி னார். செயலாளர் ந. சேகர், அகில இந்திய துணைத் தலைவர் சி சந்திரசேகரன் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். தோழமைச்சங்க நிர்வாகிகள் பி. வைரமுத்து, எம். ராஜ் மோகள், ஜி. மீனாட்சி சுந்தரம், கே முரளி தரன் ஆகியோர் ஆத ரித்துப் பேசினர். மதுரை கோட்ட காப்பீட்டு கழக ஊழியர் சங்கத் தலைவர் என். சுரேஷ்குமார் நிறைவுரை யாற்றினார். சங்கப் பொரு ளாளர் பி. மகாலிங்கம் மற்றும் பலர் பங்கேற்றனர்.