districts

img

சுதந்திர தின அமுதப் பெருவிழா கற்பித்தல் படைப்புகளை காட்சிப்படுத்திய பெண் தன்னார்வலர்களுக்கு பாராட்டு

குடவாசல், ஏப்.3 -  இந்திய தேசத்தின் 75 ஆவது சுதந்திர தின  விழாவை சிறப்பாக கொண்டாடும் வகை யில் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங் களிலும் அமுதப் பெருவிழா கொண்டாடப் பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த மார்ச் 29 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் காயத்ரிகிருஷ்ணன் தலை மையில் தொடங்கப்பட்ட நிகழ்ச்சி, பனகல் சாலை அருகே விமரிசையாக 20-க்கும் மேற்பட்ட  அரசுத் துறைகள் சார்பாக கண்காட்சி முகமை கள் நடைபெற்று வருகின்றன. திருவாரூர் மாவட்டம் கல்வி துறை சார்பாக ஒன்றியங்க ளில் உள்ள தன்னார்வலர்கள், தங்களின் கற்பித்தல் படைப்புகளை காட்சிப்படுத்தி வரு கின்றனர். இந்த வகையில் ஏப்.2 ஆம் தேதி குட வாசல் ஒன்றியத்தைச் சேர்ந்த தன்னார்வ லர்கள் ரம்யா, காயத்ரி, செல்வி, காவியா, வெண்ணிலா ஆகியோர் காட்சிப்படுத்தி இருந்த  படைப்புகள் கல்வித்துறை அதிகாரிகள், மாணவர்கள் மற்றும் பொது மக்களிடையே பாராட்டைப் பெற்றன. இந்த பங்களிப்பினை செய்த தன்னார்வ லர்களை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரபா கரன், வட்டார வளமைய மேற்பார்வையாளர் பூபாலன், ஆசிரியர் பயிற்றுனர் ரவிச்சந்தி ரன், இல்லம் தேடிக் கல்வி வட்டார ஒருங்கி ணைப்பாளர்கள் சுதாகர், கனகராஜ் உள்ளிட் டோர் பாராட்டினர். நிகழ்ச்சியில் நாட்டுப்புற பாடல்கள், பரதம், பறை, நாடகம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.