மயிலாடுதுறை, ஜன.10 - மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம் பாடி வட்டம், கிடாரங்கொண்டான் கிரா மத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலை யத்தில் காரீப் பருவம் 2024-2025 சம்பா பருவத்திற்கான நெல் கொள்முதல் பணி களை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி தொடங்கி வைத்தார். பின்னர், மாவட்ட ஆட்சியர் செய்தி யாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக் கிணங்க, இந்த ஆண்டு காரீப் பரு வத்திற்கு, 175 நெல் கொள்முதல் நிலை யம் திறக்க அனுமதி வழங்கியு உள்ளோம். 68 மையங்களை திறந்து உள்ளோம். தற்போது, நெல் வரத்து தகுந்தாற்போல், மீதமுள்ளவை படிப் படியாக திறக்கப்படும். மயிலாடு துறையில் 68,880 ஹெக்டேர் பயிர் சாகு படி செய்துள்ளோம். 3,44,400 மெ.டன் நெல் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலம் 2,50,000 மெ.டன் தற்போது கொள்முதல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்ன ரக நெல் குவிண்டால்1-க்கு 2320, ஊக்கத்தொகை 130, மொத்தம் 2450-க்கும், பொதுரக நெல் குவிண்டால்1-க்கு ரூ.2300-ம், ஊக்கத்தொகையாக ரூ.105-ம், மொத்தம் ரூ.2405 என வழங்கப்படும். சன்னரக நெல் ஒரு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.980-க்கும், பொது ரகம் ஒரு மூட்டைக்கு (40 கிலோ) ரூ.962-க்கும், விவசாயிகளுக்கு வழங்கப்படும். விவசாயிகள் விற்பனை செய்ய பயிரிட்டதற்கான ஆதாரங்களான பட்டா, சிட்டாவை அந்தந்த கிராம நிர்வாக அலுவலர்களிடம் பெற்றுக் கொள்ளலாம். அதில் ஏதேனும் சிர மங்கள் இருந்தால் மாவட்ட நிர்வாகத் தினரை அணுகலாம். குறைகளை களைய 24 மணிநேரமும் செயல்படும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம். அதேபோல், 04364-211054 என்ற தொலைபேசி எண்ணில் புகார் தெரி விக்கலாம், மேலும், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலா ளரின் 8760947606 என்ற கைப்பேசி எண்ணிலும் புகார்கள் தெரிவிக்கலாம். மாவட்ட ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர்களிடமும் நேரடியாக புகார்களை தெரிவிக்கலாம். இந்த ஆண்டு விவசாயிகளிட மிருந்து எளிமையாக நெல்லை கொள் முதல் செய்து அவர்களுக்கு எந்த சிரமு மின்றி வழங்க வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு பிறப்பித் துள்ளார். ஆகவே, விவசாயிகள் இதனை பயன்படுத்தி பயனடைய லாம். இவ்வாறு ஆட்சியர் தெரிவித்தார்.