districts

திருச்சி மாநகராட்சியில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டம் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 8 - திருச்சி மாநகராட்சி, கோ.அபி ஷேகபுரம் கோட்டம் 8 ஆவது வார்டு குழு மணி சாலைப் பகுதியில், மாவட்ட ஆட்சியர் சிவராசு தலைமையில், மாநக ராட்சி மேயர் அன்பழகன், முசிறி சட்ட மன்ற உறுப்பினர் தியாகராஜன் ஆகி யோர் முன்னிலையில் செவ்வாயன்று நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்புத் திட்டத்தினை மரக் கன்றுகள் நட்டு தொடங்கி வைத்து, வேலை செய்பவர்களுக்கு வேலைக் கான அடையாள அட்டையினை வழங்கி னர். பின்னர் அமைச்சர் நேரு பேசுகை யில், நகர்ப்புற ஏழைகளின் வாழ்வாதா ரத்தை உயர்த்தும் நோக்கில் டாக்டர்  சி.ரங்கராஜன் தலைமையில் அமைக்கப் பட்ட குழு பரிந்துரையின் அடிப்படை யில், நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டத்தை முன்னோடித் திட்டமாக தமிழக முதலமைச்சர் செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, ரூ.100 கோடி மதிப்பீட்டில் நகர்ப்புற வேலை வாய்ப்புத் திட்டம் என்ற திட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியில் இரண்டு மண்டலங்களிலும், ஏனைய  மாநகராட்சிகளில் தலா ஒரு மண்ட லமும், 7 நகராட்சி நிர்வாக மண்டலங்க ளில் தலா ஒரு நகராட்சி என 7 நகராட்சி கள், 37 மாவட்டங்களில் தலா ஒரு பேரூ ராட்சி வீதம் 37 பேரூராட்சிகளிலும் இந்த  ஆண்டு செயல்படுத்தப்படுகிறது.

இதனைத் தொடர்ந்து, திருச்சி மாநக ராட்சியில் உள்ள கோ.அபிஷேகபுரம் கோட்டத்தில், இத்திட்டத்தின் கீழ் இப்பகுதியில் 67,762 குடியிருப்புகளில், 62,300 குடியிருப்புகள் ஆய்வு செய்யப்பட்டு, தகுதியான 5,630 நபர்கள்  விருப்பம் தெரிவித்ததன் அடிப்படை யில் 5,630 வேலை அட்டை வழங்கப்பட்டு உள்ளது.  இத்திட்டத்தில் பெண்கள் வாழ்வா தாரத்தை மேம்படுத்தும் வகையில் 50  சதவீதம் குறையாமல் பெண் பணியாளர் களை அமர்த்தி இருபாலருக்கும் சம அளவில் ஊதியம் நிர்ணயம் செய்யப் படவுள்ளது. இத்திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வார்டு பகுதிகளிலும் உள்ள  பங்குதாரர்கள் அடங்கிய குழுவினை  தேர்வு செய்து, அந்த குழுக்கள் பரிந்து ரைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன.  அதன்படி, சாலையோரத்தில் மழை நீர் சேகரிப்புத் தொட்டிகள் அமைத்தல், மாநகராட்சி பூங்காக்கள் பராமரிப்பு, சாலையோரம் உள்ள முட்பு தர்கள், களைகளை அகற்றி வடிகால்  அமைத்தல், நுண் உர செயலாக்க மையங்களை இயக்கி பராமரித்தல், சாலையோரம் மரம் நடுதல், கோவில் குளம் தூர்வாருதல், ஏற்கனவே உள்ள  வடிகால்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை  மராமத்து செய்தல் போன்ற பணிகளை  மேற்கொள்ள 2021-22 ஆம் ஆண்டிற்கு ரூ.142.50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு,  ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு ரூ.363 வீதம் வழங்கும் வகையில் ரூ.88.39 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.