திருச்சிராப்பள்ளி, அக்.10 - திருச்சி பஞ்சப்பூரில் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம், கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் பல்வகைப் பயன்பாட்டு மையம் கட்டு மானப் பணிகளை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு திங்களன்று தொ டங்கி வைத்தார். மேலும், இப்பணி களுக்கான வரைபடத்தினை பார்வையிட்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார். பின்னர் அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டுமானப் பணி ரூ.159 கோடி, பல்வகைப் பயன்பாட்டு மையம் கட்டுமானப் பணி ரூ.84.78 கோடி, கனரக சரக்கு வாகன முனையம் கட்டுமானப் பணி ரூ.65.90 கோடி, சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உள்கட்டமைப்பு வசதிகள் ரூ.40.30 கோடி என மொத்தம் ரூ.349.98 கோடி மதிப்பீட்டில் கட்டுமானப் பணிகள் திங்களன்று தொடங் கப்பட்டுள்ளன. இந்த பணிகள் ஓராண்டு காலத்தில் முடிவடைந்து பயன்பாட்டிற்கு வரும். பஞ்சப்பூரில் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் கட்டும் பணியின் மொத்த பரப்ப ளவு 40.60 ஏக்கர். கட்டுமானப் பரப்பளவு 7.02 ஏக்கர். புறநகர் பேருந்து நிறுத்த தடங்கள் 124. நீண்ட நேர பேருந்து நிறுத்த தடங்கள் 142. குறைந்த நேர நிறுத்த தடங்கள் 78. மொத்த பேருந்து நிறுத்த தடங்களின் எண்ணிக்கை 404. நகரப் பேருந்து நிறுத்த தடங்கள் 60. கடைகளின் எண்ணிக்கை 70. நான்கு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 556. இரண்டு சக்கர வாகன நிறுத்தங்களின் எண்ணிக்கை 1125. ஆட்டோ ரிக்சா நிறுத்தங்களின் எண்ணிக்கை 350. நகரும் படிக்கட்டுகள் ஆகிய வசதிகளுடன் அமைக்கப் பட உள்ளது.
பல்வகை பயன்பாடுகள் மற்றும் வசதிகளுக்கான மையம்
மொத்த பரப்பளவு 5.20 ஏக்கர். அடித்தள கட்டுமான பரப்பளவு 1.47 ஏக்கர். தரைத்தள கட்டுமான பரப்பளவு 2.46 ஏக்கர். முதல் தள கட்டுமான பரப்பளவு 2.29 ஏக்கர். 2 ஆம் தளம், 3 ஆம் தளம் மற்றும் 4 ஆம் தள கட்டு மானங்களின் பரப்பளவு 0.22 ஏக்கர். தரைத்தள கடைகளின் எண்ணிக்கை 149. முதல்தள கடைகளின் எண்ணிக்கை 193.
கனரக சரக்கு வாகன முனையம்
மொத்த பரப்பளவு 29 ஏக்கர், கட்டுமான பரப்பளவு 2.88 ஏக்கர், தொகுப்பு -1 வாகன நிறுத்தத் தடங்கள் 256, தொகுப்பு -2 வாகன நிறுத்தத் தடங்கள் 104. தரைத்தள கடைகள் 20. முதல் தளம் - தங்குமிட வசதி, உணவக கட்டிடம் ஆகியவை அமைய உள்ளது.
சாலைகள், மழைநீர் வடிகால் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள்
சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 1048 மீ. அகலம் 36 மீ. (ஒருங்கிணைந்த பேருந்து முனையம் பகுதி). சிமெண்ட் கான்கிரீட் சாலை நீளம் 744 மீ. அகலம் 24 மீ (கனரக சரக்கு வாகன முனையம் பகுதி). ஒருங்கி ணைந்த பேருந்து முனைய பகுதியில் பசுமை பரப்பு, மின்வசதி, குடிநீர் வசதி மற்றும் மழை நீர் வடிகால் செல்லும் வசதி ஆகியவை ஏற்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. இது தவிர திருச்சி மாநகரில் ரூ.366.53 கோடிக்கு 1536 சாலை, குடிநீர் குழாய், பாதாள சாக்கடை உள்ளிட்ட பணிகள் 416.15 கி.மீ தூரத்திற்கு நடைபெற்று வருகிறது. அதில் 203.26 கி.மீ பணிகள் முடிக்கப்பட்டுள் ளன. மீதமுள்ள பணிகளும் விரைவில் முடி வடையும். திருச்சி அண்ணாசாலை முதல் ஜங்சன் வரை உயர்மட்ட பாலம் அமைப்ப தற்கு ரூ.966 கோடியில் திட்ட மதிப்பீடு அளிக்கப்பட்டுள்ளது. அதற்கு விரைவில் டெண்டர் விடப்படும். காவிரி பாலம் முதல் மல்லாச்சிபுரம் வரை ரூ.480 கோடி மதிப்பில் உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. தலைமை தபால் நிலையம் முதல் கோர்ட் ரவுண்டானா வரை 356 கோடியில் உயர்மட்ட பாலம் அமைய இருக்கிறது. அசூர் முதல் ஜீயபுரம் வரை ரூ.1113 கோடி மதிப்பீட்டிலும், பஞ்சப்பூர் முதல் ஜீயபுரம் வரை 700 கோடி ரூபாய் செலவிலும் இந்த பணிகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யப்பட்டு உள்ளது. மேலும், உன்னியூர் முதல் நெரூர் காவிரிப் பாலம் வரை இதுபோன்ற பல்வேறு பணி களும், திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் முதல் ஸ்ரீரங்கம் வரை புதிய காவிரி பாலமும் கட்டப்பட உள்ளது.
காவிரி பாலத்தில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் புன ரமைப்பு பணிகள் மூன்று மாதத்தில் முடிவ டையும். கோரையாறு கரைப் பகுதி வழியாக சாலை அமைப்பதற்காக ரூ.320 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யப் பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்குவ தற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிப் பணி கள் நடைபெறும் பகுதிகளில் மழைக் காலங்க ளில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு பாது காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார், மாநகர காவல் ஆணையர் கார்த்தி கேயன், மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்தியநாதன், நகரப் பொறி யாளர் சிவபாதம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.