districts

நான்கு வழிச்சாலை பணி என்ற பெயரில் குடியிருப்புகளை மிரட்டி அகற்ற துடிப்பதா? சிபிஎம் கடும் கண்டனம்

மயிலாடுதுறை, பிப்.1-  மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூர் அருகேயுள்ள அப்பரா சப்புத்தூர் கிராமத்தில் உள்ள 23  ஏழை குடும்பங்களின் குடியிருப்பு களை மிரட்டி அகற்றத் துடிக்கும்  மாவட்ட காவல்துறை, வருவாய்த்  துறை அதிகாரிகளின் அடாவடித்த னத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி கடும் கண்டனம் தெரிவித் துள்ளது. விழுப்புரம் முதல் நாகை வரை யில் நான்கு வழிச்சாலை அமைப்ப தற்கான பணிகள் மிக தீவிரமாக  நடைபெற்று வருகிறது.நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை, குடியிருப்புகளை இழந்தவர் களுக்கு மாற்று இடமும், இழப்பீடும் வழங்கப்படவில்லை என பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரு கிறது.  இந்நிலையில் தரங்கம்பாடி வட்டத்திற்குட்பட்ட ஆக்கூர் அரு கேயுள்ள அப்பராசப்புத்தூர் கிரா மத்தில் 23 ஏழை மக்களின் குடி யிருப்புகளுக்கு எந்தவித இழப்பீ டும் மாற்று இடமும் வழங்கப்படா மல், காவல்துறையினரை வைத்து  குடிசைகளை அகற்றுவதற்கான தொடர் முயற்சியில் சாலை அமைக்  கும் ஒப்பந்த நிறுவனமும், நகாய்  அதிகாரிகளும், வருவாய் துறை யினரும் அடாவடித்தனமாக ஈடு பட்டு வருகின்றனர்.  

இதுகுறித்து கட்சியின் மயிலாடு துறை மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன் கூறுகையில், தொடர்ச்சி யாக  பல்வேறு போராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும்,  தமிழ்நாடு விவசாயிகள் சங்கமும் நடத்திவருவதோடு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளையும் சந்தித்து அப்பராசப்புத்தூர் அப்பாவி மக்க ளின் குடியிருப்புகளுக்கு உரிய மாற்று இடமும், நிவாரணமும் கேட்டு வலியுறுத்தி வருகிறது.  ஆனால், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் காவல்துறையினரை வைத்து ஏழை மக்களை மிரட்டி  குடிசைகளை அகற்றி, அவர்களின் இடத்தை அபகரிக்க முயலுகின்ற னர்.  அப்பராசப்புத்தூரில் கடந்த  5 தலைமுறையாக பண்ணையில்  விவசாய கூலி வேலை செய்து உழைத்து கொடுத்ததன் அடிப்ப டையில், 23 குடும்பங்களுக்கு குடி யிருப்புகள் கட்டிக்கொள்ள இடம் போராடி பெறப்பட்டது.  2007 ல் நிலம் கேட்டு நடை பெற்ற போராட்டத்தில் காவல்  துறை திட்டமிட்டு வன்முறை யை கட்டவிழ்த்து கூலித்தொழி லாளர்களை கடுமையாக தாக்கி 62 பேர் மீது பொய் வழக்குப்பதிவு செய்து இன்னமும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துவருகிறது.  தாக்குதலுக்குள்ளான அந்த மக்கள் இன்னமும் மீளாதநிலை யில், தற்போது நான்கு வழிச்சாலை என்ற பெயரில் குடியிருப்புகளை உரிய இழப்பீடுமின்றி, அடா வடித்தனத்தோடு அகற்றிவிடலாம் என்பதை மார்க்சிஸ்ட் கட்சி ஒரு போதும் அனுமதிக்காது.  எனவே உடனடியாக மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கையை தாமதிக்காமல் எடுக்கவேண்டும்’’ என்று கூறினார்.