districts

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் வீடுகளில் மீண்டும் சோதனை

கரூர், ஜூலை 12-

     கரூரில் அமைச்சர் செந்  தில் பாலாஜியின் ஆதரவா ளர்கள் வீடுகளில் செவ் வாய்க்கிழமை முதல் வரு மான வரித்துறை அதிகாரி கள் சோதனை நடத்தி வரு கின்றனர்.

    கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில், அமைச்சர் செந்  தில் பாலாஜி போக்குவரத்து  துறை அமைச்சராக இருந்  தார். அப்போது வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக எழுந்த புகாரையடுத்து அவரது வழக்கை உச்ச நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தர விட்டது.

    இந்நிலையில் கடந்த மே 26 முதல் ஜூன் 2 வரை வரு மான வரித்துறை அதிகாரி கள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் மற்றும் அவ ரது ஆதரவாளர் வீடுகளில்  சோதனை மேற்கொண்ட னர். மேலும் அவரது ஆதர வாளர் வீடுகளில் இருந்து ஆவணங்களை எடுத்துச் சென்றனர். சில இடங்களில் அவரது ஆதரவாளர்களின் வீடுகளுக்கும், நிறுவனங் களுக்கும் சீல் வைத்தனர்.

    இந்நிலையில் அமலாக் கத்துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 13 முதல் இரு  நாட்கள் கரூர் ராமகிருஷ்ணா புரத்தில் உள்ள அமைச்சர்  செந்தில் பாலாஜியின் சகோ தரர் அசோக்குமார் வீடு மற் றும் செந்தில் பாலாஜியின் பெற்றோர் வசிக்கும் ராமேஸ்வரபட்டியில் உள்ள வீடு மற்றும் நெருங்கிய நண் பர் வெங்கமேட்டைச் சேர்ந்த  சண்முகம் என்பவரது வீடு  ஆகிய 3 இடங்களில் சோதனை நடத்தினர்.  

    இந்நிலையில் மீண்டும் வருமான வரித்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை முதல் செந்தில் பாலாஜியின் ஆதரவாளரான, கொங்கு மெஸ் மணி வசிக்கும் கரூர்  ராயனூரில் அவரது வீட்டி லும், கோவைச் சாலையில்  உள்ள இரு நிதி நிறுவ னங்கள், கிரஷர் அலுவல கம் மற்றும் மாயனூர் பகுதி யில் கட்டிடம் மற்றும் சாலைப் பணிகள் ஒப்பந்த தாரரான எம்சிஎஸ்.சங்கரின் பண்ணை வீடு, கரூர் சின்  னாண்டாங்கோவில் பகுதி யில் உள்ள கொசுவலை நிறு வனம் உள்ளிட்ட 7 இடங்க ளில் ஆய்வு செய்து வரு கின்றனர்.

     தொடர்ந்து இந்த சோதனை நடைபெறும் என  அதிகாரி ஒருவர் தெரி வித்தார். வருமான வரித் துறையினர் இரண்டாவது முறையாக அமைச்சர் செந் தில் பாலாஜியின் ஆதரவா ளர்கள் வீடுகளில் சோதனை நடத்துவது குறிப்பிடத்தக் கது.