திருச்சிராப்பள்ளி, செப்.11- திருச்சி மாநகராட்சி 49 ஆவது வார்டுக்கு உட்பட்ட முடுக்கு பட்டி யில் கடந்த பல வருட காலமாக பொதுமக்கள் வசித்து வருகின்ற னர். இந்த நிலையில் அந்த இடம் ரயில்வே நிர்வாகத்திற்கு சொந்த மானது என்று கூறி கடந்த சில நாட்க ளுக்கு முன்பு ரயில்வே நிர்வாகம் சார்பில் வீட்டை காலி செய்யுமாறு பொதுமக்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதனை கண்டித்தும், பொது மக்களை அப்புறப்படுத்தும் முயற்சி கைவிட வலியுறுத்தியும் மாக் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யில் அப்பகுதி மக்கள் ஞாயிறன்று வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். சிபிஎம் மாநகர் மாவட்ட செயலா ளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் வெற்றிச்செல்வன் மற்றும் மக்கள் முன்னேற்ற பொதுநல சங்க தலை வர் கணேசன், செயலாளர் ராஜா, பொருளாளர் சுப்பிரமணியன் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். போராட்டத்தில் முடுக்குப்பட்டியை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வில்லை என்றால் 13 ஆம் தேதி திருச்சி ஜங்ஷன் ரயில்வே அலுவல கத்தை முற்றுகையிட்டு போராட் டம் நடத்துவது என்று போராட்டக் குழுவினர் அறிவித்தனர்.