பட்டா மேல்முறையீடு: மனுக்கள் மீது விசாரணை
பாபநாசம், ஜன.29 - தஞ்சாவூர் மாவட்டம் பாப நாசம் தாலுகா அலுவலகத்தில் பட்டா மேல் முறையீட்டு மனுக் கள், கணினி திருத்த மனுக்கள், கால தாமத பிறப்பு, இறப்பு பதிவு மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. கும்பகோணம் உதவி ஆட்சியர் ஹிருத்யா விஜயன் தலைமையில் 74 கோப்புகள் மீது விசாரணை நடந்தது. இதில், பாபநாசம் வட்டாட்சி யர் செந்தில்குமார், கும்பகோ ணம் உதவி ஆட்சியரின் நேர்முக உதவியாளர் பூங்கொடி, சமூக பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட் சியர் முருககுமார், மண்டல துணை வட்டாட்சியர்கள் பிரபு, பிராங்கிளின், தலைமை யிடத்து துணை வட்டாட்சியர் சத்யராஜ், கூடுதல் துணை வட்டாட்சியர் மணிகண்டன், வட்ட சார் நிலஅளவை ஆய்வா ளர் கிருஷ்ணமூர்த்தி, வரு வாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி யாளர்கள், கோப்பு தொடர்பான மனுதாரர்கள், எதிர் மனுதாரர் கள் கலந்து கொண்டனர்.
தமிழ் மக்கள் கலை விழா
பாபநாசம், ஜன.29 - தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தை அடுத்த கபிஸ் தலத்தில் தமிழ் மக்கள் கலை விழா நடந்தது. தஞ்சாவூர் பானுமதி இராஜரெத்தினம் குழுவினரின் பொய்க்கால் குதிரை ஆட்டம், திருவெங்கனூர் அய்யாறப்பன் குழுவினரின் வானத்தில் வண்ணக் கோலமிட்ட வாண வேடிக்கை, ஜக்குள் சகோத ரர்களின் மின்னல் வேக நிகழ்வு கள், சென்னை கலைவாணன் பொம்மலாட்ட கலைக் குழுவின ரின் தொட்டான்... கெட்டான் ... எனும் புதுமையான பொம்ம லாட்டம், திருப்பூர் நிமிர்வு கலை யகத்தின் பறை இசை, செந்தில் கணேஷ்-ராஜலெட்சுமி குழு வினரின் மக்கள் இசை நிகழ்ச்சி, நன்றி கூறும் உருமி மேளம் நடந்தது. முன்னதாக விழாவை மாநி லங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம் தொடங்கி வைத்துப் பேசினார். முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் நாகராஜனுக்கு விருதளித்து, திராவிடர் கழக பொதுச் செய லர் அன்புராஜ் பேசினார். இதில் தந்தை பெரியார் அறிவியல், கலை, பண்பாடு, விளையாட்டு மன்ற மதிப்புத் தலைவர் சண் முகம், செயல் தலைவர் குணா, ஒருங்கிணைப்பாளர் மோகன், அறிவொளி, பாபநாசம் பெனிபிட் பண்ட் சேர்மன் ஆறுமுகம், திருஞான சம்பந்தம், தீபக் உட்பட பலர் பங்கேற்றனர்.
வழக்குரைஞர் கொலை முயற்சி இருவர் குண்டர் சட்டத்தில் கைது
அரியலூர், ஜன.29 - அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்த பொன்பரப்பி, சந்தை தெருவைச் சேர்ந்தவர் அறிவழகன் (49), ராயம்புரம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சிவா (32). இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த டிச.10 அன்று இலைக்கடம்பூர் வழக்குரைஞர் ஒருவரை தாக்கி கொலை முயற்சியில் ஈடு பட்டனர். அப்புகாரின் பேரில் செந்துறை காவல்துறையினர், கொலை முயற்சி மற்றும் பட்டியல் வகுப்பினர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிந்து, மேற்கண்ட இருவரையும் கைது செய்து ஜெயங்கொண்டம் கிளைச் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், இவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட காவல் கண்காணிப்பா ளர் தீபக் சிவாச் பரிந்துரை செய்ததன் பேரில், மேற்கண்ட இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட ஆட்சியர் பொ.ரத்தினசாமி ஞாயிற்றுக்கிழமை உத்தர விட்டார். இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
பிப்.6-இல் பட்ஜெட் நகல் கிழிப்பு போராட்டம்: அனைத்து தொழிற்சங்கங்கள் முடிவு
திருச்சிராப்பள்ளி, ஜன.29 - அனைத்து மத்திய தொழிற்சங்க நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் செவ்வாயன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தொமுச மாவட்டச் செயலாளர் ஜோசப் நெல்சன் தலைமை வகித்தார். கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் சிஐடியு ரெங்கராஜன், ஏஐடியுசி சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஐஎன்டியுசி மாவட்டத் தலைவர் வெங்கட் நாராயணன் வரவேற்றார். மாநிலச் செயலாளர்கள் எச்.எம்.எஸ் ஜான்சன், ஏஐசிசிடியு ஞானதேசிகன், எல்எல்எப் தெய்வீகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில், திருத்தப்பட்ட தொழிலாளர் சட்டத் திருத்த தொகுப்பை அமல்படுத்தும் அறிவிப்பை ஒன்றிய அரசு பட்ஜெட்டில் வெளியிடக் கூடாது. தனியார்மயக் கொள்கையை எதிர்த்தும், தொழிற்சங்க உரிமைகளை பாதுகாக்க வலியுறுத்தியும் பிப்.10 முதல் 17 ஆம் தேதி வரை கோரிக்கை பிரச்சாரம் நடத்துவது, அகில இந்திய அளவில் அனைத்து மத்திய தொழிற்சங்கங்களும் விடுத்த அறைகூவல்படி பிப்.6 அன்று பட்ஜெட் கிழிப்பு போராட்டத்தை பிஎஸ்என்எல் தலைமை அலுவலகம் முன் நடத்துவது, ஒன்றிய, மாநில அரசு நிறுவன ஊழியர்கள் மத்தியில் வாயில் கூட்டங்களை நடத்துவது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர்கள் தொமுச குணசேகரன், சிஐடியு சீனிவாசன், ஏஐடியுசி நடராஜா, எச்எம்எஸ் செல்வம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மின் கசிவால் தீ விபத்து வீடு எரிந்து சேதம்: பூம்புகார் எம்எல்ஏ நிவாரணம் வழங்கல்
மயிலாடுதுறை, ஜன.29 - மயிலாடுதுறை மாவட்டம், திருக்கடையூர் அருகே பிள்ளை பெருமாள்நல்லூர் ஊராட்சி கீழத்தெருவில் வசித்து வருபவர் சரஸ்வதி சுரேஷ் (39). இவரது கூரை வீடு மின் கசிவால் திடீரென்று எரிந்து முற்றிலும் சேதமடைந்து, வீட்டிலிருந்த பீரோ, கட்டில் மற்றும் மின்சாதன பொருட்கள் தீயில் கருகி நாசமாயின. தகவலறிந்த பூம்புகார் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்து தனது சொந்த விதியிலிருந்து ரூ.10 ஆயிரம், அரிசி, மளிகை பொருட்கள் மற்றும் வேட்டி, புடவை வழங்கினார். அதேபோல் அரசு சார்பில், வருவாய்த்துறை மூலம் நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன.
திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதை பயணிகளின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?
தஞ்சாவூர், ஜன.29 - திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதை சுமார் 149 கிலோமீட்டர் தூரம் ஆகும். மயிலாடுதுறை - திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதை பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் போடப்பட்டது. இப்பாதையில் 4 நாடாளுமன்ற தொகுதிகள், 5 சட்ட மன்ற தொகுதிகள், 5 மாவட்டங்கள், 10 தாலுகாக்கள், 7 நக ராட்சிகள், 4 பேரூராட்சிகள், 12 ஊராட்சி ஒன்றியங்கள், 456 கிராம ஊராட்சிகள் உள்ளன. ரயில் பாதையில் உள்ள உத்தேசமான மக்கள் தொகை 18 லட்சம். இப்பாதையில் புராதன கோயில்கள், கல்வி நிறுவ னங்கள், சதுப்பு நிலக்காடுகள், பறவைகள் சரணால யங்கள், சுற்றுலா தலங்கள், உப்பளங்கள், மீன்பிடி துறை முகங்கள், தொழில் நிறுவனங்கள், வர்த்தக நிறுவ னங்கள் ஆகியவை நிறைந்துள்ளன. திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை அமைக்க வேண்டிய காரணத்திற்காக, இந்த தடத்தில் இயங்கி வந்த சென்னை - காரைக்குடி கம்பன் விரைவு ரயில் 2006 இல் நிறுத்தப்பட்டது. 2018-19 ஆம் ஆண்டில் இப்பாதை அகல ரயில் பாதையாக மாற்றி அமைக்கப்பட்டதும், சென்னைக் கான தினசரி இரவு நேர ரயில்கள் இதுவரை இயக்கப்பட வில்லை. மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய மயிலாடு துறை - காரைக்குடி பயணிகள் ரயில்களும் இயக்கப்பட வில்லை.
கோரிக்கைகள்
தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு சென்று வர மீட்டர் கேஜ் காலத்தில் இயங்கிய சென்னை எழும்பூர் - காரைக்குடி தினசரி இரவுநேர ரயிலான கம்பன் விரைவு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும். கம்பன் விரைவு ரயில் நின்று சென்ற அனைத்து ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். தற்போது பொங்கல் பண்டிகையையொட்டி இயக்கப் பட்ட தாம்பரம் - ராமேஸ்வரம் - தாம்பரம் சிறப்பு விரைவு ரயிலை (06104/06103) தினசரி இரவுநேர விரைவு ரயிலாக சிறிய நேர மாற்றத்துடன் இயக்க வேண்டும். தற்போது வாரம் மும்முறை இயங்கி வரும் தாம்பரம் - செங்கோட்டை- தாம்பரம் ரயிலை (20683/20684) தினசரி ரயிலாக இயக்க வேண்டும். இந்த அதிவிரைவு ரயில் அதிராம்பட்டினம் பேராவூரணி ரயில் நிலையங்களில் நின்று செல்ல வேண்டும். மயிலாடுதுறை - காரைக்குடி, காரைக்குடி - மயிலா டுதுறை பயணிகள் ரயில்களை மீட்டர்கேஜ் காலத்தில் இயக்கியது போல இரு முனைகளில் இருந்தும் இயக்க வேண்டும். இத்தடத்தில் உள்ள பயணிகள் காரைக்குடி யில் இறங்கி, ரயிலில் மாறி திருச்சிக்கு சென்று வர வசதி யாக, திருவாரூர் - காரைக்குடி - திருவாரூர் பயணிகள் ரயிலின் (06197/06198) நேரத்தை சற்று மாற்றி தர வேண்டும். அதிராம்பட்டினம், பேராவூரணி அறந்தாங்கி ரயில் நிலையங்களில் நடைமேடை நீளத்தை அதிகரிக்க வேண்டும். இந்த அனைத்து முக்கியமான கோரிக்கைகளையும் விரைவில் நிறைவேற்றித் தர வேண்டும் என திருவாரூர் - காரைக்குடி ரயில் பாதையில் உள்ள ரயில் பயணிகள் சங்கங்கள், வர்த்தக சங்கங்கள், தன்னார்வ அமைப்புகள், ஒன்றிய ரயில்வே அமைச்சர், ரயில்வே வாரிய சேர்மன், தெற்கு ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு கோரிக்கை விடுத்து உள்ளனர்.
மாட்டு வண்டி, குதிரை வண்டி எல்கைப் பந்தயம்
தஞ்சாவூர், ஜன.29 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளையொட்டி 23 ஆம் ஆண்டு மாட்டு வண்டி மற்றும் குதிரை வண்டி எல்கைப் பந்தயம் திங்கட்கிழமை நடைபெற்றது. பேராவூரணி திமுக சுற்றுச்சூழல் அணி மற்றும் பேரா வூரணி ஸ்ரீ பிள்ளையார் நண்பர்கள் இணைந்து நடத்திய போட்டியில் பெரிய மாடு, கரிச்சான் மாடு, பூஞ்சிட்டு மாடு, நடுக்குதிரை, புதுப்பூட்டு குதிரை என பல்வேறு பிரிவு களாக போட்டி நடைபெற்றது. போட்டியை, தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் ச.முரசொலி சட்டமன்ற உறுப்பினர்கள் அசோக் குமார் (பேராவூரணி), துரை.சந்திரசேகரன் (திருவை யாறு), கா.அண்ணாதுரை (பட்டுக்கோட்டை) ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டிகளில் முதல் நான்கு இடங்களைப் பிடித்த வண்டி உரிமையா ளர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன.