மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்டக் குழு உறுப்பினரும் சிஐடியு மாவட்டத் தலைவருமான ம.கண்ணனின் தந்தை மணிவேல், வயது முதிர்வு காரணமாக திருப்புரம்பியத்தில் காலமானார். அன்னாரது இறப்புச் செய்தி அறிந்து கட்சியின் தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை. பாண்டியன், கோ.நீலமேகம், கும்பகோணம் மாநகரச் செயலாளர் செந்தில்குமார், சிஐடியு போக்குவரத்து தொழிலாளர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.