புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ் நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தர்ணா போராட்டம் மாவட்ட துணை தலைவர் ஆர். கோவிந்தன் தலைமையில் நடைபெற்றது. கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் மாநில செயலாளர் அண்ணா குபேரன், மாவட்ட செயலாளர் முகமது உசேன் உள்ளிட்ட பலர் பேசினர்.