districts

img

மின்வாரிய தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கிடுக! கோரிக்கை புத்தகம் வெளியிட்டு ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, பிப்.9 - தமிழ்நாடு மின் வாரியத்தில் 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  இவர்களுக்கான ஊதிய உயர்வு 4 ஆண்டு களுக்கு ஒருமுறை அறிவிக்கப்படும் பட்சத்தில் 4 ஆண்டுகள் நிறைவடைந்த நிலை யில் ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.  25 மாதங்கள் கடந்தும் ஊதிய உயர்வு  குறித்த பேச்சுவார்த்தையையும் தமிழக அரசு  மற்றும் மின்சார வாரியம் தொடங்கவில்லை. ஊதிய உயர்வு வழங்கப்படாததால் தொழிலா ளர்கள் மற்றும் பொறியாளர்கள் படும் இன்னல்கள் குறித்தும், மின்வாரியத்தின் அவலம் குறித்தும் ஊதிய உயர்வு கோரிக்கை  புத்தகத்தினை தமிழகம் முழுவதும் உள்ள  மின்வாரிய அலுவலகங்களின் வாசலில் சிஐடியு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாயன்று வெளியிடப் பட்டது. இதையொட்டி திருச்சி தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலு வலகம் முன்பு ஊதிய உயர்வு கோரிக்கை  புத்தகத்தை வெளியிட்டும் மின்சாரவாரிய த்தில் உள்ள 51 ஆயிரம் காலிப் பணியிடங் களை உடனே நிரப்ப வேண்டும். டி.ஏ முடக்கப் பட்டும், சம்பள சரண்டர் முடக்கம் போன்ற வற்றை கைவிட வேண்டும். ஊதிய உயர்வுக் கான பேச்சு வார்த்தைக் குழு தொழிற்சங்கங் களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் செவ்வாயன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆர்ப்பாட்டத்திற்கு சங்க வட்ட துணைத்  தலைவர் நடராஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்க ராஜன், வட்ட செயலாளர் செல்வராஜ் ஆகி யோர் பேசினர் இதில் சங்க நிர்வாகிகள் பலர்  கலந்து கொண்டனர்.