திருச்சிராப்பள்ளி, ஏப்.25 - திருச்சி மாநகர குடியிருப்போர் நலச் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் திங்க ளன்று மாநகராட்சி மேயரிடம் கொடுத்த மனு வில் தெரிவித்திருப்பதாவது: திருச்சி மாநகராட்சி பகுதியில் பாதாள சாக்கடை இணைப்புக்கு வைப்புத் தொகை யாக 2020 - 21 ஆம் ஆண்டு வரை ரூ.6000 வசூ லிக்கப்பட்டு வந்தது. 2021 ஏப்ரல் மாதம் முதல் வைப்பு தொகை ரூ.6600 ஆக உயர்த்தி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது ஒரு குறிப்பிட்ட அளவில் நிர்ணயம் செய்யப்பட்ட தொகை யாக இல்லாமல் ரூ.10,000, ரூ.12,000 என உயர்த்தி கேட்பதாகவும், நோட்டீஸ் வழங்கப்படுவதாகவும் தகவல் இருக்கிறது. எனவே ஏற்கனவே வசூலிக்கப்பட்டு வரும் ரூ.6600-க்கு மிகாமல் கட்டணத்தை ஒரே சீராக இருக்குமாறு அறிவித்து, அந்த கட்ட ணத்தை மட்டும் மாநகராட்சி அலுவலர்கள் வசூல் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கிற பாதாள சாக்கடை திட்டத்திற்கு வருட பரா மரிப்பு தொகையாக 2017-18 ஆண்டிற்கு ரூ.360-ம், 2018-19, 2019-20, 2020-21 ஆண்டுகளுக்கு ரூ.720-ம் வசூலிக்கப்பட்டுள் ளது.
தற்போது 2021 -22 ஆண்டிற்கு ரூ.1680 கட்ட வேண்டும் என நோட்டீஸ் வந்துள்ளது. இந்த வருட கட்டணமானது கடந்த ஆண்டை விட 130 விழுக்காடு மாநகராட்சி அதி காரிகளால் தன்னிச்சையாக உயர்த்தப் பட்டுள்ளது. வரைமுறையே இல்லாமல் இப்படி 100 விழுக்காட்டிற்கு மேல் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது எந்த விதத்திலும் நியாயமானது அல்ல. ஆகவே பாதாள சாக்கடை திட்டத்திற்கான வருட பராமரிப்பு தொகையை பெரும்பான்மையான மக்கள் ஏற்றுக் கொள்ளும் வகையில் கட்டணத்தை நிர்ணயம் செய்திட நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். குடியிருப்பு பகுதிகளில் தெரு நாய் களின் தொல்லை அதிகமாக உள்ளது. தெரு நாய்க்களை பிடித்திட நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தெருக்களில் சுற்றித் திரியும் கால்நடைகளால் விபத்து ஏற்படு வதையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்திருந் தனர். மேயரிடம் மாநகர ஒருங்கிணைப்பா ளர்கள் லெனின், சக்திவேல், சுப்பிரமணியன் ஆகியோர் மனுவை வழங்கினர்.