districts

img

மின்வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புக! பிப்ரவரி 16 இல் மின் ஊழியர் மத்திய அமைப்பு போராட்டம்

திருச்சிராப்பள்ளி, ஜன.25- தமிழ்நாடு மின்வாரியத்தில் உள்ள 58 ஆயிரம் காலிப்பணியிடங்களை உடனே நிரப்புவது உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின்  ஊழியர் மத்திய அமைப்பின் திருச்சி  பெருநகர் வட்டம் சார்பில் செவ்வா யன்று தென்னூரில் உள்ள மின்வாரிய தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு வாயிற் கூட்டம் நடைபெற்றது. சிஐடியு மாநகர் மாவட்ட செய லாளர் ரெங்கராஜன் தலைமை வகித்  தார். தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய  அமைப்பின் மாநில பொதுச்செய லாளர் எஸ்.ராஜேந்திரன் விளக்கிப் பேசி னார். சங்க வட்ட பொருளாளர் பழனி யாண்டி நன்றி கூறினார்.  முன்னதாக மாநில பொதுச்செய லாளர் எஸ்.ராஜேந்திரன் செய்தியா ளர்களிடம் கூறுகையில், ‘‘பொதுமக்க ளுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வும், குறைபாடுகள் இல்லாத சேவை களை செய்ய மின்வாரியத்தில் காலி யாக உள்ள 21ஆயிரம் களஉதவியா ளர்கள், 4ஆயிரம் மீட்டர் ரீடிங் எடுப்ப வர்கள், 4ஆயிரம் உதவிபொறியா ளர்கள் என 58ஆயிரம் காலிப்பணி யிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டது.  இந்த கோரிக்கைகள் குறித்து நடை பெற்று வரும் பேச்சுவார்த்தையில் சுமூக தீர்வு எட்டப்பட வேண்டும். ஒப்  பந்த ஊழியர்களை அடையாளம் கண்டு தினக்கூலி வழங்கக் கோரி பிப்ரவரி 16 அன்று மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடைபெற உள்ளது’’ என்  றார்.