districts

மின்சார சட்டதிருத்த மசோதாவை கைவிடுக மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில மாநாடு வலியுறுத்தல்

சென்னை, ஆக.13- மின்துறையை தனியார்மயப் படுத்த மின்சார சட்ட திருத்த மசோதா-2022 -ன் பாதகமான அம்சங்களை , பொதுமக்களிடம் விளக்கி பிரச்சாரம் செய்வது என சென்னையில் நடை பெறும் மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாநில அரசின் உரிமையை பாது காக்கவும், தரமான மின்சாரம், தடை யில்லா மின்சாரம், மக்கள் வாங்கும் விலையில் மின்சாரம் என்ற உயர்ந்த எண்ணத்துடன் மின்துறையை பாது காக்க போராடுவோம். மின்சார சட்டத் திருத்த மசோதாவை கைவிட வேண்டும் என்று அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை
மின்வாரியத்தில் பணியாற்றும் ஊழியர்கள், பொறியாளர்கள், அலு வலர்கள், பகுதிநேர பணியாளர்கள், ஒப்பந்த ஊழியர்களுக்கு 1.12.2019 முதல் புதிய ஊதிய உயர்வு வழங்கி இருக்க வேண்டும். ஊதிய உயர்வு வழங்க வேண்டிய காலத்திலிருந்து 35 மாதங்கள் கடந்துவிட்டன. கடந்த ஒப்பந்தத்தின் போது 22 மாத நிலுவையை இழக்க பெய ரிட்டது. எனவே, உடனடியாக பேச்சு வார்த்தையை தொடங்கி, தொழிற் சங்கங்கள் ஏற்றுக்கொள்ளும் வகை யில் ஒப்பந்தம் காண வேண்டும். திமுக அரசு 2021-ல் தனது தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதி யின்படி, காலம் தாழ்த்தாமல் புதிய ஓய்கூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

பாலியல் புகார் குழு
பெண்கள் பணிபுரியும் இடங்களில் அவர்கள் பாதுகாப்பாக பணி செய்வதற்கு ஏதுவாக, உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் முறையான பாலியல் புகார் குழுக்களை அமைக்க வேண்டும். எனவே சரண் விடுப்பையும், நிறுத்தி வைக்கப்பட்ட ஆகவிலைப்படியையும் உடனடியாக வழங்கிட வேண்டும். மின் வாரியத்தில் வாரிசு வேலை, மற்றும் நேரடி நியமனங்களின்மூலம் பல படித்த பெண்கள், இளம்பெண்கள் பணிக்கு வந்துள்ளதால் பெண்கள் அதிகம் பணி புரியும் இடங்களில் குழந்தைகள் காப்பகம் அமைத்திட வேண்டும். தமிழத்திற்கு தேவையான மின்சாரத்தை முழுமையாக அரசே உற்பத்தி செய்திட வேண்டும்.

பகுதிநேர பணியாளர்கள்
மின்வாரியத்தில் பணியாற்றும் பகுதிநேர பணியாளர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வாரிய தலைமையிடத்தில் வழங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாகியும் பணி நியமன உத்திரவு வழங்காமல் உள்ளனர். இதில் பாதிக்கப்பட்ட 1023 பணியாளர்களுக்கு பணி நியமன உத்திரவை விரைந்து வழங்கிட வேண்டும் மின்வாரி யத்திலுள்ள ஒப்பந்த ஊழியர்களை அடையாளங்கண்டு, நிரந்தரப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.