மயிலாடுதுறை, டிச.6- அவுட்சோர்சிங் என்ற பெயரில் மின்வாரி யத்தை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும். காலிப்பணியிடங்களை ஒப்பந்த தொழிலாளர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என வலியுறுத்தி மயிலாடுதுறை, திருச்சி, கரூர் ஆகிய மாவட்டங்களில் தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு திட்ட தலைவர் என்.வெற்றிவேல் தலைமை வகித்தார்.சிஐடியூ மாவட்ட செயலாளர் ப.மாரியப்பன், மாவட்ட தலைவர் ஆர்.ரவீந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் எம். கலைச்செல்வன், ஆர்.ராமானுஜம் உள்ளிட் டோர் கண்டன உரையாற்றினர்.
திருச்சிராப்பள்ளி
திருச்சிராப்பள்ளி மாவட்டம் மன்னார்புரத் தில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறி யாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வட்டத்தலைவர் நடரா ஜன் தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் உள்ளிட் டோர் பேசினர்.
கரூர்
கரூர் மேற்பார்வை பொறியாளர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு குளித்தலை கோட்டச் செயலாளர் பி.நெடு மாறன் தலைமை வகித்தார். மின் பொறியா ளர் அமைப்பின் மாநில துணைத் தலைவர் ஜி.கோபாலகிருஷ்ணன், மின் ஊழியர் மத்திய அமைப்பு மாநில செயலாளர் க. தனபால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.