மயிலாடுதுறை, ஜன.24 - பருவம் தவறிய பலத்த மழையினால் அறு வடைக்கு தயாராக இருந்து சேதமடைந்த நெற்பயிர்களுக்கு உரிய நிவாரணம் கேட்டு, மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம், திருக்கடையூரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் எம்.கணேசன் தலைமை வகித்தார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் டி.சிம்சன், ஒன்றியச் செயலாளர் என்.சந்திரமோகன், மாநிலக் குழு உறுப்பினர் பி.குணசுந்தரி, அம்மையப்பன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி உரை யாற்றினர். போராட்டத்தை விளக்கி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் காபிரியேல் உரையாற்றி னர். சங்கத்தின் ஒன்றியக் குழு உறுப்பி னர்கள் உரையாற்றினர். மாவட்டத்தில் கடந்த ஜன.18,19 தேதி களில் பருவம் தவறி பெய்த பலத்த மழையி னால், அறுவடைக்கு தயாராக இருந்து சேத மடைந்த நெற்பயிர்களுக்கும், அத்தோடு விதைக்கப்பட்டிருந்து மழையோடு, மழை யாக அழுகிப் போன உளுந்து பயறுகளுக்கு நிவாரணம் கேட்டும், ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக அறிவிக்க வேண்டும். நேரடி நெல் கொள்முதல் நிலையங்க ளில் விவசாயிகளிடம் நெல்லினை கொள் முதல் செய்யும் போது, ஈரப்பதம் 17 சத வீதம் என்பதை 22 சதவீதமாக உயர்த்த வேண்டும் என வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.