முத்துப்பேட்டை, பிப்.25- முன்னாள் ராணுவத்தினரின் பொதுக்குழுக் கூட்டம் முத்துப்பேட்டையில் ப்ளைட் லெப்ட்நெண்ட் ஆறுமுகம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் சார்ஜண்ட் பாலசுப்பிரமணியன் மக்கள் சேவை அடிப்படையில் இந்தியாவில் முத்துப்பேட்டை காவல் நிலையம் சிறந்த காவல் நிலையம் என்று அறிவிக்கப்பட்டதைத் தெரிவித்தார். பின்னர், முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் அனைத்து காவலர்களையும், அதிகாரிகளையும் பாராட்டி, பொன்னாடை போர்த்தி நினைவு பரிசு வழங்கினார். கேப்டன் சுந்தரராஜன், சார்ஜண்ட் முனைவர் நா.ராஜமோகன் உள்ளி்ட்டோர், முன்னாள் படைவீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.