districts

img

பள்ளிகளில் கல்வி வளர்ச்சி நாள் கொண்டாட்டம்

அரியலூர், ஜூலை 16 -

     மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜர் பிறந்தநாளையொட்டி, அரியலூரை அடுத்த லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் சனிக்கிழமை கல்வி வளர்ச்சி நாள் விழா நடை பெற்றது. விழாவுக்கு வள்ளலார் கல்வி நிலையத்  தலைவர் சீனி.பாலகிருஷ்ணன் தலைமை வகித்தார். அரியலூர் சட்டப் பேரவை உறுப்பினர்  கு.சின்னப்பா சிறப்புரையாற்றி, பல்வேறு போட்டிகளில் வெற்றிப் பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.  

    சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழாவுக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை தலைமை வகித்தார். ஏகேஎம் அகாடமி நிறுவனர் கதிர்.கணேசன் சிறப்புரையாற்றினார். இடையார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்ற விழா வுக்கு ஜெயங்கொண்டம் வட்டாரக் கல்வி அலு வலர் ராசாத்தி தலைமை வகித்தார்.

 நோட்டு, பேனா வழங்கல்

    தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளி சார்பில் நோட்டு, பேனா வழங்கப்பட்டது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனை வர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமையில், குமரப்பா பவுண்டேஷன் பொருளாளர் அஸ்வின்ஸ்ரீதர், குமரப்பா பள்ளி மாணவர்கள் வழங்கினர்.

    ஆரியசேரி அரசுப் பள்ளி

    கும்பகோணம் அருகே உள்ள ஆரியச்சேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கல்வி  வளர்ச்சி நாள் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில்  திருச்சேறை கடன் நிவர்த்தி ஆலய தலை மைக் குருக்களும் ஸ்ரீ சித்தநாதக் குருக்கள் அறக்கட்டளையின் நிர்வாகியுமான எஸ்.சுந்தர மூர்த்தி குருக்கள் கலந்துகொண்டு, அறக்கட்ட ளையின் சார்பில் பள்ளிக்கு ரூ.7000 மதிப்பி லான மின் விசிறிகளை வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற 60-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு மேலாண்மை குழு தலைவர் சித்ரா ரவிச்சந்திரன் பரிசுகளை வழங்கினார்.

 பொன்னமராவதி

    புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளியில் நடைபெற்ற காமராஜர் பிறந்த நாள் விழாவிற்கு ராயல் லயன்ஸ் சங்கத் தலைவர்  திருநாவுக்கரசு தலைமை வகித்தார். ஊராட்சித் தலைவர் செல்வி முன்னிலைவகித்தார். தலை மையாசிரியர் சுபத்ரா வரவேற்றார். ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விழா விற்கு தலைமையாசிரியர் நவநீதகிருஷ்ணன் தலைமை வகித்தார். பழனியப்பா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் விஜய் மக்கள் இயக்கம் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.  

அறந்தாங்கி

    எல்ஷடாய் பள்ளி புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அக்ர காரத்தில் செயல்படும் எல்ஷடாய் கேம்பிரிட்ஜ்  பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பள்ளித் தாளாளர் அலெக்சாண்டர் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் மோனாலிஷா எல்ஜின் வர வேற்று பேசினார். எல்ஷடாய் கல்வி குழுமத்தின்  முதல்வர் எல்ஜின்ஆரோஸ், காமராஜர் படத்தை திறந்து வைத்து கல்வியின் முக்கியத்துவம் பற்றி  பேசினார். 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்ட விழாவில், கவிதை போட்டி  மற்றும் கலை நிகழ்ச்சிகளில் வென்றவர்களுக்கு  பரிசுகள் வழங்கப்பட்டன.