திருச்சி, பிப்.3- திருச்சி மாவட்டம் முசிறி நகராட்சி அலுவலகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்த லுக்கான வேட்புமனு தாக்கல் பணிகளை திருச்சி மாவட்ட ஆட்சியர் சிவராசு நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார். மேலும் தா.பேட்டை, மேட்டுப் பாளையம், தொட்டியம், காட்டுப் புத்தூர் உள்ளிட்ட பேரூராட்சி களை சேர்ந்த வாக்குகள் எண்ணப்படவுள்ள முசிறி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி யில் ஆட்சியர் சிவராசு பணிகளை பார்வையிட்டு பல்வேறு ஆலோச னைகளை வழங்கினார். நகராட்சி ஆணையர் மனோகரன் மற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.