தஞ்சாவூர், டிச.18 - தஞ்சாவூர் மாவட்டம், திருவோணம் ஒன்றியம், பொய்யுண்டார் குடிகாடு ஊராட்சியில், தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் சார்பாக, சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினத்தையொட்டி, கிளைச் செயலாளர் விஜயா தலைமை யில், ஒன்றியச் செயலாளர் கோவி.ராதிகா சங்கக் கொடியை ஏற்றி வைத்தார். இதில் மாவட்ட செயலாளர் பி.எம். இளங்கோவன் கலந்து கொண்டார். திருவோணம் ஒன்றியம், சோழகன்குடிக்காடு ஊராட்சியில், தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை மெயின் சாலையில், திருமேனி தலைமையில் ஒன்றிய துணைத்தலைவர் துரைராஜ் முன்னிலையில், மாவட்ட செயலாளர் பி.எம். இளங்கோவன் கொடியேற்றி வைத்தார். பட்டுக்கோட்டை - கந்தர்வ கோட்டை மெயின் சாலை, திருவோணம் ஒன்றியம், சோழகன்கரை ஊராட்சி, தெற்குகோட்டை ஊராட்சி ஆகிய இடங்களில் கொடியேற்றி வைக்கப்பட்டது. நெய்வேலி வடபாதி, தென்பாதியை இணைக்கும் கடைத் தெருவில், தென்பாதி ஊராட்சி மன்றத் தலைவர் கொடி ஏற்றி வைத்தார். கிளாமங்களம் ஊராட்சியில், தனசேகரன், திங்கள்கண்ணன் தலைமையில், சமூக ஆர்வலர் மூர்த்தி கொடியேற்றி வைத்தார். இதில், மாவட்டச் செயலாளர் பி. எம்.இளங்கோவன், ஒன்றியச் செயலாளர் கோவி. ராதிகா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.