திருச்சிராப்பள்ளி, செப்.1- திருச்சி பொன்மலை ஜிகார்னர் காய்கறி மார்க் கெட்டில் அடிப்படை வசதி கள் செய்து தரவேண்டும். காந்தி மார்க்கெட்டை உடனே திறக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சுமைப் பணி தொழிலாளர் சங்கம் (சிஐ டியு) சார்பில் ஜிகார்னர் சர் வீஸ் சாலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமைப் பணி சங்க மாவட் டத் தலைவர் குணசேகரன் தலைமை வகித்தார். சிபிஎம் மாநகர் மாவட்டச் செயலா ளர் ராஜா, மாவட்டச் செயற் குழு உறுப்பினர் ஜெயபால், பொன்மலை பகுதி செயலா ளர் கார்த்திகேயன் ஆகி யோர் கண்டன உரையாற்றி னர். ஆர்ப்பாட்டத்தின் போது காவல்துறையினருக்கும் சுமைப் பணி தொழிலா ளர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து சுமைப் பணி தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் நடைபெற்ற பேச்சு வார்த்தையை அடுத்து மறி யலை கைவிட்டு கலைந்து சென்றனர்.