பள்ளிகளில் இரவு நேரக் காவலர்களை நியமிக்க கோரிக்கை
மதுரை, ஜன.10- தமிழ்நாடு அரசு கல்வித்துறைக்கான பல்வேறு திட்டங்களின் கீழ் மாணவர்களின் கல்வி நலனில் மிகுந்த அக்கறையுடன் அனைத்து ஆரம்பப் பள்ளிகளுக்கும் திறன் வகுப்பறைக்கான கட்டமைப்பினை ஏற்படுத்தி அதற்கான தளவாட பொருட்கள் மற்றும் திறன் வகுப்பறை செயல்படுவதற்காக இலட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள அனைத்து விதமான தொழில்நுட்ப பொருள்களையும் வழங்கியுள்ளது. மேலும், நடுநிலை. உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என ஒவ்வொரு பள்ளிக்கும் பல லட்சம் மதிப்பிலான ரூபாயில் உயர் தொழில் நுட்ப ஆய்வகம் அமைப்பதற்காக அனைத்து விதமான தொழில்நுட்ப பொருள்களையும் தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. மேற்கண்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருள்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும். இரவு நேரங்களில் பள்ளி வளாகங்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் மதுரை மாநகராட்சி நிர்வாகத்திற்கு உட்பட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் இரவு நேரக் காவலர்களை நியமித்து இரவு நேரங்களில் பள்ளிகளின் முழு பாதுகாப்பையும் உறுதி செய்ய, காவலர்கள் நியமிக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மதுரை மாநகராட்சி ஆணையாளருக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.
ஆண்டிபட்டியில் சீமான் மீது புகார்
தேனி, ஜன.10- தந்தை பெரியார் பற்றி அவதூறு பரப்பியதாக நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது, ஆண்டிபட்டி காவல்நிலையத்தில் திமுக, திராவிடர் கழகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தார். இதற்கு திமுக, திராவிட கழகத்தினர் உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து சீமான் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. திமுக கிழக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம் தலைமை யில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் திராவிட கழகத்தை சேர்ந்த நிர்வாகிகள், சீமான் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு அளித்தனர்.
புகையில்லா போகி கொண்டாடுக! தேனி ஆட்சியர் வேண்டுகோள்
தேனி, ஜன.10- புகையில்லாத போகி பண்டிகையை கொண்டாட வேண்டும் என பொதுமக்களுக்கு தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு; போகி பண்டிகை நாளில் கிழிந்த பாய்கள், பழைய துணிகள் தேய்ந்த துடைப்பங்கள், தேவையற்ற விவசாய கழிவுகள் ஆகியவற்றைத் தீயிட்டுக் எரிப்பார்கள். பெரும்பாலும், நமது கிராமங்களில் கடைபிடிக்கும் இப்பழக்கம், சுற்றுச்சூழலுக்கு பெரும் தீமையை ஏற்படுத்தாத ஒன்றாகும். மக்கள் நெருக்கம் மிகுந்த நகரங்களில் டயர், ரப்பர் பிளாஸ்டிக் மற்றும் செயற்கை பொருட்களை தீயிட்டு எரிக்கையில் நச்சுப் புகைமூட்டம் ஏற்பட்டு மக்களுக்கு சுவாச நோய்கள், இருமல் மற்றும் நுரையீரல், கண், மூக்கு ஏரிச்சல் உட்பட பல்வேறு பிரச்ச னைகள் ஏற்படுகின்றன. நச்சுக்காற்றாலும் கரிப்புகை யினாலும், காற்று மாசுபட்டு நம் நகரமே புகை மண்டல மாக காட்சியளிக்கிறது. நச்சுப்புகை கலந்த பனிமூட்டத்தால் சுகாதார பாதிப்பும், சாலை போக்குவரத்திற்கும் தடை ஏற்படுகிறது. இதுபோன்ற செயல்கள் மூலம் காற்றை மாசுபடுத்துவது சட்டப்படி குற்றமாகும். மேலும், பழைய மரம், வறட்டி, தவிர வேறு எதையும் எரிப்பதற்கு உயர்நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள்மீது நட வடிக்கை எடுக்கப்படும்.
பொங்கல் பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
திண்டுக்கல், ஜன.10- பொங்கல் பண்டிகையையொட்டி அரசு போக்கு வரத்துக்கழகம் திண்டுக்கல் மண்டலம் சார்பாக 10.1.2025 முதல் 19.1.2025 தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப் பட உள்ளன. சென்னையிலிருந்து திண்டுக்கல், தேனி, பழனி ஆகிய ஊர்களுக்கு செல்ல 170 சிறப்பு பேருந்துகளும், பொங்கல் பண்டிகை முடிந்ததும் மீண்டும் சென்னைக்கு திரும்ப 265 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளன. திண்டுக்கல் பழனி, திருச்சி, மதுரை ஆகிய ஊர்களிலி ருந்து பொங்கல் மற்றும் மகரஜோதியை முன்னிட்டு குமுளிக்கு 100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ள தாக திண்டுக்கல் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.
மாணவர்கள் மர்மச்சாவு: நீதி விசாரணை நடத்த சிபிஐ கோரிக்கை
திண்டுக்கல், ஜன.10- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் மாவட்டச் செயலாளர் ஏ.பி.மணிகண்டன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது: சில தினங்களுக்கு முன்பு அண்ணா பல் கலைக்கழக கல்லூரியில் பயிலும் பிரகாஷ் என்ற மாணவர் 4.1.2025 அன்று மர்ம மான முறையில் கிணற்றுக்குள் இறந்து கிடந்து ள்ளார். இது தொடர்பாக பெற்றோருக்கு தகவல் கொடுக்கப்படவில்லை. காவல் துறையினர் கல்லூரி முதல்வருக்கு ஆதரவாக செயல்படுகிறார். மாணவர் பிரகாஷ் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும். மேலும் பழனி அருகேயுள்ள நெய்க்காரபட்டி அரசு பள்ளியில் பயிலும் 10 ஆம் வகுப்பு மாணவர் ஆகாஷ். பட்டியலின மாணவர் என்பதற்காக பள்ளி ஆசிரியர் சாதீய ரீதியாக தாக்குதல் நடத்தியதன் விளைவாக அந்த பள்ளி மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த பிரச்சனை தொடர்பாக நீதிவிசாரணை வேண்டும் தமிழக முதல்வர் உடனடியாக தலை யிட்டு தலித் மக்களுக்கு பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
விவசாயிகள் வழங்கும் பாலுக்கு 50 பைசா ஊக்கத்தொகை
விவசாயிகள் வழங்கும் பாலுக்கு 50 பைசா ஊக்கத்தொகை தஞ்சாவூர், ஜன.10 - விவசாயிகள் தரும் பாலுக்கு கூடுதலாக 50 பைசா ஊக்கத்தொகை வழங்கப்படும் என ஆவின் அறிவித்து உள்ளது. தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரும், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியச் செயலாட்சியருமான பா.பிரி யங்கா பங்கஜம், ஆவின் பொது மேலாளர் எஸ்.சரவணக் குமார் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தஞ்சாவூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றி யத்திற்கு, சங்கங்கள் மூலம் தொடர்ந்து பால் வழங்கி வரும் விவசாய பெருமக்களை ஊக்குவிக்கும் விதமாக ஜன.2025 மற்றும் பிப்.2025 ஆகிய மாதங்களுக்கு, ஒன்றி யத்திற்கு பால் வழங்கும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டி னம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயி களுக்கு, அவர்கள் வழங்கும் பாலுக்கு லிட்டர் ஒன்றுக்கு ஏற்கனவே அரசு வழங்கும் கூடுதல் ஊக்க விலை ரூ.3/- உடன் மேலும் கூடுதலாக, ஒன்றியம் தனது சொந்த நிதியிலிருந்து லிட்டர் ஒன்றுக்கு 50 காசுகள் கூடுதல் ஊக்க விலையாக வழங்கும்” என கூறப்பட்டுள்ளது.