திருச்சிராப்பள்ளி, அக்.3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பின ரும், கேரள மாநிலத்தின் முன்னாள் செயலாளருமான தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் அண்மையில் உடல் நலக்குறைவால் சென்னையில் காலமா னார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் சார்பில் டெல்டா மாவட்டங்களின் பல்வேறு இடங்களில் திங்களன்று அவ ரது உருவப்படத்திற்கு மாலை அணி வித்து செவ்வஞ்சலி செலுத்தப்பட்டது. திருச்சி வெண்மணி இல்லத்தில் நடந்த இரங்கல் கூட்டத்திற்கு மாநிலக் குழு உறுப்பினர் ஸ்ரீதர் தலைமை வகித் தார். மாநகர் மாவட்ட செயலாளர் ராஜா, மாவட்ட செயற்குழு, மாவட்டக் குழு மற்றும் கட்சியினர் தோழர் கோடியேரி பாலகிருஷ்ணன் உருவப்படத்திற்கு மலர்தூவி செவ்வணக்கம் செலுத்தி னர்.
நாகப்பட்டினம்
சிபிஎம் நாகை மாவட்டக் குழு அலுவலகத்தில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில், கட்சியின் மாவட்டச் செயலாளர் வி.மாரிமுத்து, சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினரும், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினரு மான உறுப்பினர் வி.பி.நாகைமாலி, நாகை நகரச் செயலாளர் க.வெங்கடே சன் உள்ளிட்டோர் செவ்வஞ்சலி செலுத் தினர்.
தஞ்சாவூர்
இதையொட்டி தஞ்சாவூர் கணபதி நகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டக்குழு அலுவலகத்தில், மறைந்த தோழரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத் தப்பட்டது. சிபிஎம் மாவட்டச் செயற் குழு உறுப்பினர்கள் ஆர்.மனோ கரன், பி.செந்தில்குமார், என்.சிவகுரு ஆகியோர் புகழஞ்சலி உரை நிகழ்த்தி னர். இதில் மாவட்டக்குழு உறுப்பி னர்கள் என்.குருசாமி, என்.சரவணன், தஞ்சை ஒன்றியச் செயலாளர் கே.அபி மன்னன், மாநகரச் செயலாளர் எம். வடிவேலன், மாநகரக் குழு உறுப்பி னர்கள் கரிகாலன், அப்துல் நசீர் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டம் காந்தி பூங்கா முன்பு கோடி யேரி பாலகிருஷ்ணன் உருவப் படத் திற்கு, சிபிஎம் ஜெயங்கொண்டம் ஒன்றிய செயலாளர் எம்.வெங்கடா சலம் தலைமையில் செவ்வஞ்சலி செலுத் தப்பட்டது. கட்சியின் மாவட்ட செய லாளர் இளங்கோவன், மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் ஆறு, மணிவேல், கே.கந்தசாமி உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர். இதேபோல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த கோடியரி பால கிருஷ்ணன் படத்திற்கு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் கிருஷ்ணன், ஒன்றிய செயலாளர் துரை.அருணன் மற்றும் மாவட்ட குழு உறுப்பினர்கள் புகழஞ்சலி செலுத்தினர்.